'மெர்சல்' நஷ்டம் எனக் கூறியவர்களுக்கு தயாரிப்பாளர் பதிலடி!

By Vignesh Selvaraj

Recommended Video

'மெர்சல்' நஷ்டம் எனக் கூறியவர்களுக்கு தயாரிப்பாளர் பதிலடி!- வீடியோ

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுவிட்டது. இப்படத்தின் மூலம் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் தான் கிடைத்துள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த மெர்சல் படம் 40 முதல் 60 கோடி வரை நஷ்டம் என சினிமாத் துறையை சேர்ந்த தயாரிப்பாளர், மற்ற பிரபலங்கள் பேட்டிகளில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் நஷ்டம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மெர்சல் நஷ்டமா?

மெர்சல் நஷ்டமா?

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படம் ரூ. 40 கோடி நஷ்டம் என்றார். ஒரு தயாரிப்பாளரே இப்படிக் கூறியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சேகர் கருத்து

எஸ்.வி.சேகர் கருத்து

நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளார். இதுநாள் வரை எந்த ஒரு விநியோகஸ்தர்களும் மெர்சல் நஷ்டம் என்று கூறியது இல்லை.

தனஞ்செயன் கருத்து

இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் "இது ஒரு திட்டமிட்ட பேச்சு போல உள்ளது. தயாரிப்பாளர் படம் நஷ்டம் என எதுவும் கூறவில்லை, நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்துகொண்டு லாஜிக் இல்லாமல் பேச வேண்டாம்." எனக் கூறினார்.

நஷ்டம் கிடையாது

"விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என அனைவருக்கும் லாபம் கிடைத்துள்ளது அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடைய வாய்ப்பில்லை. மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் விளக்கும் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்கள் நஷ்டம் எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X