மாநாட்டில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா சிம்பு...தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

சென்னை : இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சிம்பு நடித்துள்ள மாநாடு. இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 25 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய டிரைலர் ஒன்றை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Recommended Video

Hindi படத்துல கூட Simbhu நடிக்கனும் Venkat Prabhu Speech in Maanadu Pre-release

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாட்டிற்கு யு/ஏ சான்று

மாநாட்டிற்கு யு/ஏ சான்று

இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள், டிக்கெட் புக்கிங் ஆகியன ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளது.

இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா சிம்பு

இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா சிம்பு

இந்நிலையில் இந்த படத்தில் வரும் அரசியல் தொடர்பான காட்சிகளில் சிம்பு இரண்டு விதமாக தோற்றமளிக்கிறார். இதனால் மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சந்தேகம் ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது.

தயாரிப்பாளர் சொன்ன தகவல்

தயாரிப்பாளர் சொன்ன தகவல்

இது பற்றி விசாரித்ததில், இந்த படத்தின் டைரக்டரான வெங்கட் பிரபு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே இது போல் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டாராம். இது பற்றிய சுரேஷ் காமாட்சியிடம் கேட்ட போது, மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. அதே சமயம் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவின் பிரம்மாண்ட கம் பேக்காக இருக்கும் என்று மட்டும் கூறி சன்பென்ஸ் வைத்துள்ளார்.

சர்பிரைஸ் இருக்குமா

சர்பிரைஸ் இருக்குமா

ஆனால் பல தடைகளை தாண்டி மாநாடு படம் ரிலீசிற்கு தயாராகி உள்ளதால், ரசிகர்களுக்கு சர்பிரைஸ், அவர்களின் காத்திருப்பிற்கும் உற்சாகம் தரும் வகையில் பல சுவாரஸ்யங்களை படத்தில் சேர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. படம் ரிலீசாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிம்புவின் ரோல் பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X