'மூடர் கூடம் நவீன் ஒரு ஏமாற்றுக்காரர்'... ரஜினி மருமகனின் தாய்மாமா சரமாரி குற்றச்சாட்டு!

மூடர் கூடம் நவீன் ஒரு ஏமாற்றுக்காரர் என தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் தெரிவித்துள்ளார். சென்னை: மூடர் கூடம் நவீன் ஒரு ஏமாற்றுக்காரர் என ரஜினி மருமகன் விசாகனின் மாமனார் சொர்ணா சேதுராமன் குற்றஞ்சாட்டியு

Recommended Video

திருமணத்தை குறித்து மூடர் கூடம் நவீன் விளக்கம்- வீடியோ

சென்னை: மூடர் கூடம் நவீன் ஒரு ஏமாற்றுக்காரர் என நடிகர் ரஜினியின் இளைய மருமகனான விசாகனின் தாய்மாமாவும், தயாரிப்பாளருமான சொர்ணா சேதுராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நவீன், அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத தயாரிப்பாளர் சேதுராமன் பொய் குற்றச்சாட்டுகளை கூறி தடை பெற்றுள்ளதாகக் கூறினார்.

மூடர் கூடம் நவீன்

மூடர் கூடம் நவீன்

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன், " எனது பிளாஷ் பிலிம்ஸ் என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன். அப்போது " மூடர்கூடம் " நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் 45 லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம் போட்டு, அதன்படி நடந்து கொள்வதாகக் கூறினார்.

ஒப்பந்தப்படி நடக்கவில்லை

ஒப்பந்தப்படி நடக்கவில்லை

ஆனால் ஒப்பந்தத்தின்படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மாதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால் படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு அலுவலகம் மூலமாகவே செய்யப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

நான் இதன் பிறகு 27.04.2017 ல் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக புகார் கொடுத்தேன். அப்போது பல முறை அழைத்தும் நவீன் வரவில்லை. கடைசியாக ஒருநாள் வந்து விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை. நவீன் மூடர்கூடம் என்னும் ஒருபடம் மட்டும் தான் எடுத்துள்ளார். மற்றபடி ஏற்கனவே கொளஞ்சி என்ற படம் எடுத்து 2 வருடங்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அந்த தயாரிப்பாளரையும் ஏமாற்றியுள்ளதாக கேள்விப்பட்டேன்.

சட்டப்பூர்வமான நடவடிக்கை

சட்டப்பூர்வமான நடவடிக்கை

நான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட பட விஷயமாக கோர்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி கோர்டில் சந்திப்பதை விட்டுவிட்டு அறிக்கை கொடுத்து ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி இதிலிருந்து விடுபட திட்டமிடுகிறார். ஏற்கனவே பல புகார்கள் அவர்மேல் இருப்பதாக அறிகிறேன். என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன் பார்க்க போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார்.

போலியான குற்றச்சாட்டு

போலியான குற்றச்சாட்டு

நான் சட்டபூர்வமாகதான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார்.

More from Filmibeat

Read more about: naveen நவீன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X