நீங்க இப்படி செய்யலாமா?... அஜித்தை விமர்சனம் செய்த ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்!
சென்னை : ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர் ஆதம் பாவா, அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் வினோத். இவர் அஜித்தை வைத்து ஹிந்தி பட ரீமேக்கான பிங்க் என்ற படத்தை இயக்கினார்.
அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தாயாராகி வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேக்கிங் வீடியோ
வலிமை திரைப்படம் வெளியாக சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. அதில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற காட்சிகள் மனதை பதைபதைக்கும் வகையில் இருந்தன.

பதைபதைக்கும் காட்சிகள்
பைக் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடம் வலிமை மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தின் சண்டை காட்சிக்காக நிஜமாகவே பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்தபோது அஜீத் சாலையில் வழுக்கி விழும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது.

இரு சக்கர வாகனம் தான்
இந்நிலையில், ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர் ஆதம் பாவா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவர்கள் மட்டுமல்லாமல் எதிரே வருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

நாற்காலி
தயாரிப்பாளர் ஆதம் பாவா ஆன்டி இண்டியன் திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது. வி.இசட்.துரை இயக்கத்தில் நாற்காலி அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











