அப்போவே அந்த பொண்ணு வேணாம்னு சொன்னேன்.. அவரு கேட்கல.. நடிகை அமலா பால் குறித்து குமுறிய அழப்பன்!

சென்னை: அப்போதே அமலா பாலை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏஎல் அழகப்பன். இவர் சைவம், இது என்ன மாயம், ஒரு நாள் இரவில், சம்டைம்ஸ், வனமகன் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.

மேலும் ஈசன், கதை திரைக்கதை வசனம், இயக்கம், நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஏஎல் விஜய் மற்றும் உதயா.

நடிகையுடன் திருமணம்

நடிகையுடன் திருமணம்

இந்நிலையில் இயக்குநர் ஏஎல் விஜய், மைனா, தலைவா, தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2012ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அமலா பால் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மீண்டும் காதல்

மீண்டும் காதல்

இதன் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிய முடிவு செய்தனர். பின்னர் 2017ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குநர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அமலா பாலும் தான் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.

தனுஷ்தான் காரணம்

தனுஷ்தான் காரணம்

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பன், இயக்குநர் விஜய் மற்றும் அமலா பாலின் திருமணம் மற்றும் விவகாரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஏற்கனவே விஜய் - அமலா பால் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்பே அமலா பாலை திருமணம் செய்ய வேண்டாம் என இயக்குநர் விஜயிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

எவ்வளவோ சொன்னேன்

எவ்வளவோ சொன்னேன்

அப்போது உங்கள் மகன்கள் சினிமாவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் அமலா பாலை திருமணம் செய்வதை தடுத்தீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் அழகப்பன், அதற்கு முன்னரே எனக்கு அமலா பால் மீது நம்பிக்கை இல்லை. இதுதொடர்பாக அந்தப்பெண் வேண்டாம் என விஜயிடம் நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன். அந்தப் பெண் உனக்கு செட்டாகாது என்றேன்.

தலையை ஆட்டியது

தலையை ஆட்டியது

ஆனால், அமலாபாலைதான் திருமணம் செய்வேன் என விஜய் உறுதியாக இருந்தார். அவர் உறுதியாக இருந்ததால்தான் திருமணத்திற்கு சம்மதித்தோம். திருமணத்திற்கு முன்பே அமலாபாலிடம் இந்து மதத்திற்கு மாற வேண்டும், திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என கூறினேன். எல்லாவற்றுக்கும் சரி, சரி என்று தலையை ஆட்டியது அந்த பொண்ணு.

நல்ல குடும்பப்பெண்

நல்ல குடும்பப்பெண்

ஆனால் நடிகர் தனுஷின் அம்மா கணக்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது தான் பிரச்சனையே வெடித்தது. அவர் மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எப்படியோ இருவருக்கும் பிடிக்காமல் விவாகரத்து நடந்துவிட்டது. ஒரு வருடம் கழித்து ஒரு நல்ல குடும்பப்பெண் கிடைத்துவிட்டார்.

நிர்வாணமாக நடிப்பு..

நிர்வாணமாக நடிப்பு..

இப்போது அவனுக்கு ஒரு நல்ல குடும்பம் அமைந்து சந்தோசமாக இருக்கிறான் என கூறியுள்ளார். இவ்வாறு தயாரிப்பாளர் அழகப்பன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குநர் விஜயை பிரிந்த பிறகு அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆடை படத்தில் நிர்வாணமாக அவர் நடித்ததால் பெரும் சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் ஆளானார் அமலா பால் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X