விஜய்க்கும் அமலா பாலுக்கும் விவாகரத்தாக அந்த நடிகர்தான் காரணம்.. தயாரிப்பாளர் பரபர குற்றச்சாட்டு!

Recommended Video

Thalaivi First Look | Kangana Ranaut | A.L. Vijay

சென்னை: இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட காரணம் யார் என்பது குறித்து இயக்குநர் விஜயின் தந்தையான ஏஎல் அழகப்பன் மனம் திறந்து பேசியுள்ளார்.

இனி எல்லாம் சுகமே, சைவம், இது என்ன மாயம், ஒரு நாள் இரவில், சம்டைம்ஸ், வனமகன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஏஎல் அழகப்பன். இவர் ஈசன், கதை திரைக்கதை வசனம், இயக்கம், நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

புரடியூசர் கவுசிலின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் ஏஎல் அழகப்பன். தமிழ்த்திரைத்துறையின் முக்கிய நபராக கருதப்படும் தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனுக்கு இரண்டு மகன்கள்.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

இயக்குநர் ஏஎல் விஜய், மற்றும் உதயா. இவர்கள் இருவருமே திரைத்துறையில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர். இயக்குநர் விஜய், அஜித்தை வைத்து இயக்கிய கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம், தேவி, ஒரு நாள் இரவில், லக்ஷ்மி, தேவி 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

நடிகையுடன் காதல்

நடிகையுடன் காதல்

தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட தலைவி வெப் சீரிஸை இயக்கி வருகிறார். இயக்குநர் ஏஎல் விஜய் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களையும் இயக்கி வருகிறார். தனது படங்களான தெய்வ திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்த நடிகை அமலா பாலை காதலித்தார்.

விவாகரத்து

விவாகரத்து

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இயக்குநர் ஏஎல் விஜயும் நடிகை அமலா பாலும் திருமணம் செய்து கொண்டனர். 2016ஆம் ஆண்டு பிரிய முடிவு செய்த அவர்கள், 2017ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் தங்களின் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.,

ஆடை படம்

ஆடை படம்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்திருக்கிறார் அமலா பால். அமலா பால் கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார்.

நடிகர்தான் காரணம்

நடிகர்தான் காரணம்

இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் அமலா பால். இந்நிலையில் அமலா பால் மற்றும் இயக்குநர் ஏஎல் விஜய் விவாகரத்து குறித்து அவரது தந்தை ஏஎல் அழகப்பன் மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இருவருக்கும் விவாகரத்து நடக்க பிரபல முன்னணி நடிகரான தனுஷ்தான் காரணம் என கூறியுள்ளார்.

அம்மா கணக்கு

அம்மா கணக்கு

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்த நடிகை அமலா பாலை, தனது தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தது தனுஷ்தான் என்று ஏஎல் அழகப்பன் குற்றம்சாட்டியிருக்கிறார். இதனை தொடர்ந்துதான் நடிகை அமலா பால் மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

இதனாலேயே இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையில் விவாகரத்து நடைபெற்றதாகவும் தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பன் கூறியுள்ளார். பிரபல முன்னணி நடிகரான தனுஷ்தான் ஏஎல் விஜய் - அமலா பால் விவாகரத்துக்கு காரணம் என பிரபல தயாரிப்பாளர் குற்றம் சாட்டியிருப்பது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X