மாமன்னன் படம் சாதி வெறியை தூண்டுகிறது... தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர் பேட்டி!

சென்னை: மாமன்னன் படம் சாதி வெறியை தூண்டுகிறது என்று தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர் பேட்டியில் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் மாமன்னன். இப்படம் வெளியீட்டுக்கு முன் பலவிதமான சர்ச்சையில் சிக்கி இத்திரைப்படம், வெளியீட்டுக்கு பின்பு இணையத்தில் பேசு பொருளானது.

Producer AM Choudhary Devar interviewed that Maamannan movie incites casteism

இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர் எமது ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் மாரி செல்வராஜின் மாமன்னன் படம் குறித்து பேசிய அவர், பெரும்பாலான படங்களில் நடுத்தர மக்கள் தலித்துகளை இழிவுப்படுத்துவதாகவும், கொடுமைப்படுத்துவது போல படம் எடுப்பது ஏன் என்றார்.

முன் எப்போதோ நடந்த விஷயத்தை இப்போது படமாக எடுத்து, இப்போது உள்ள இளைஞர்களிடம் சாதிய எண்ணத்தை தூண்டி விடுகிறார்கள். இப்போது உள்ள சமுதாயத்தில் அனைவரும் சமமாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், இப்போது வந்து சேர் தரவில்லை, ஸ்டூல் தரவில்லை, உட்காரவிடவில்லை என்று படம் எடுப்பது சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X