பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.. சோகத்தில் திரைத்துறை!

சென்னை: இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்று இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளரான ஜெயமுருகன் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 1995 ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து சிந்து பாத் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜன்,கனகா நடித்த புருசன் எனக்கு அரசன் படத்தை தயாரித்தார். இந்த படமும் வெற்றி பெற ரோஜா மலரே, அடடா என்ன அழகு, தீ இவன் ஆகிய படங்களை தயாரித்தார்.

producer death

தயாரிப்பாளர் ஜெயமுருகன்: அதுவரை தயாரிப்பாளராக இருந்த ஜெயமுருகன், முரளி, அருண் பாண்டியன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த ரோஜா மலரே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம், வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடடா என்ன அழகு, தீ இவன் படத்தை தயாரித்த இவர் அந்த படத்திற்கு இசையும் அமைத்து இருந்தார். மேலும், லிவிங்ஸ்டன், உதயா மற்றும் விந்தியா நடித்த பூங்குயிலே என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால், அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

சோகத்தில் குடும்பத்தினர்: இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டு இருந்த ஜெயமுருகன் தற்போது சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரின் உடல் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் திடீர் மறைவு திரைத்துறை மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X