பாவம் அவருக்கு நேரம் சரியில்ல.. அடுத்தடுத்து படங்கள் பிளாப்.. புலம்பும் தயாரிப்பாளர்!

சென்னை: தெலுங்கு சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் தில் ராஜுவும் ஒருவர். இவர் கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தின் ஆடியோ லாஞ்சில் அவர் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது. அண்மையில் வெளியான அனைத்து படங்களும் பிளாப் ஆனதால் அவர் கவலையில் உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளரான தில் ராஜு படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், அதனை விநியோகமும் செய்து வருகிறார். ஆந்திராவில் தில் ராஜு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். அங்கு இவரது கண்ட்ரோலில் பல தியேட்டர்கள் உள்ளன. இவர், 2003ம் ஆண்டு தில் என்ற படத்தை தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்தார். அந்த படத்தை தொடர்ந்து, ஆரியா, பாத்ரா, முன்னா என அடுத்தடுத்து படத்தை தயாரித்து தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக மாறினார்.

Producer and film distributor Dil Raju is worried after successive failed films

தயாரிப்பாளர்: தில் ராஜு தயாரிப்பில் 2017ம் ஆண்டு துவ்வாடா ஜகன்னாதம்,ஃபிடா, வெள்ளிபொமேக்கி, ராஜா தி கிரேட், மிடில் கிளாஸ் அப்பாயி என அனைத்துப்படங்களும் வெற்றி பெற்று அந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஆனால் 2018ம் ஆண்டுக்கு பிறகு, ஜானு, வி, வக்கீல் சாப், ஷாதி முபாரக், F3, Thank you, விஜய் நடித்த வாரிசு போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

தோல்விப்படங்கள்: தில் ராஜு தனது மருமகன் ஆஷிஷை ரவுடி பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த படம் சராசரிக்கும் குறைவான கட்டணத்தை வசூலித்தது. ஆஷிஷின் இரண்டாவது படமான செல்ஃபிஷ் சில பிரச்சனைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரான தில் ராஜ் கடந்த ஆறு வருடங்களில் அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்துள்ளார். பெரிய விளம்பரங்கள் இருந்தபோதிலும், சரியான கதையை தேர்வு செய்யாததால் பெரும் சரிவை சந்தித்துள்ளார்.

கோட்டை விட்ட தில் ராஜு: ஆனால், தில் ராஜு விநியோகத்தில் பெரிய அளவில் லாபத்தை பார்த்து வருகிறார். அண்மையில் இவர் விநியோகம் செய்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமானது. ஆனால் வெற்றிப் படங்களைத் தயாரிப்பதில் தில் ராஜு கோட்டை விட்டுவிட்டதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தற்போது இவரின் தயாரிப்பில், ராம் சரணின் கேம் சேஞ்சர், நித்தினின் தம்முடு மற்றும் வெங்கடேஷின் பெயரிடப்படாத படங்கள் கைவசம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X