ஹன்சிகா மீது வழக்கு போடுவேன் - தயாரிப்பாளர் அதிரடி
சென்னை: ரவுடிக் கோட்டை படத்துக்கு எதிராகப் புகார் அளித்துள்ள ஹன்சிகா மீது வழக்குத் தொடரப் போவதாக தயாரிப்பாளர் எஸ் சுந்தரலட்சுமி அறிவித்துள்ளார்.
சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்து கொண்டிருக்கும் "ரவுடி கோட்டை" படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது.

ஹன்சிகா பேட்டி
மேலும் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியிலும், இந்தப் படம் வெளியாவது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அதைத் தடுக்கப் போவதாகவும் ஹன்சிகா கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் கோபம்
ஹன்சிகாவின் இந்தப் பேட்டி தயாரிப்பாளருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் வெளியான சீதாராம கல்யாணம் லங்கேலா என்ற படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடிக் கோட்டை. பணம் கொடுத்து உரிமை பெற்ற ஒரு படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஹன்சிகாவுக்கு என்ன உரிமை உள்ளது என அவர் கொதித்துள்ளார்.

அறிக்கை
இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ். சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:
"தெலுங்கில் வெளியான "சீதாராமகல்யாணம் லங்கலோ" என்ற படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ், விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன். படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து "ரவுடி கோட்டை" என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.
நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்த பட்டுருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டோம்.

வாய்மொழி ஒப்பந்தம் கூட இல்லை
அதற்கு அவர் ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக் கூட அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ள வில்லை என்று கூறினார்.
அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடரவேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டு படுத்தாது. இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

ஹன்சிகா மீது வழக்கு
மேற்படி ஹன்சிகா நடிகர் சங்கத்தில் எங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும். ஏற்படும் நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும் என்றார் எஸ். சுந்தரலட்சுமி.

படு கவர்ச்சி
இது பற்றி இந்த படத்தின் தமிழாக்கம் பொறுப்பேற்றுள்ள எ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது "ரவுடி கோட்டை' படத்தில் ஹன்சிகா "இச் இச் இச் "என்ற ஒரு பாடல் கட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் பயந்து போய் ஹன்சிகா தடை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











