மாப்பிள்ளை அவர்தான்.. சட்டை இவங்களுது.. பீட்டர் பாலின் முகத்திரையை கிழித்த கஸ்தூரி!

சென்னை: பீட்டர் பால் தன்னுடைய அலுவலகம் என்று கூறி வனிதாவுடன் நேர்க்காணல் அளித்த அலுவலகம் தங்களுடையது என தயாரிப்பார் அப்சா மைதீன் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் அவரது அலுவலகம் எனக்கூறி ரேர் பினாமினன் என்ற புரடெக்ஷன் நிறுவனத்தில் இருவரும் சேர்ந்து நேர்க்காணல் அளித்தார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் அதே அலுவலகத்திற்கு சென்று அந்த அலுவலகத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் அப்சா மைதீன் மற்றும் அசோஸியேட் இயக்குநர் பிரஷாந்த் ஆகியோரை நேர்க்காணல் செய்துள்ளார்.

ஃபேமஸ் ஆயிட்டேன்

ஃபேமஸ் ஆயிட்டேன்

அதில் பேசிய இயக்குநர் பிரஷாந்த், படம் பண்ண போவதில்லை, நீங்கள் கிளம்புங்கள் என்று கூறிவிட்டோம். 6 மாதத்திற்கு பிறகு இந்த இன்டர்வியூக்காக தான் நேற்று வந்துள்ளார். மேலும் படம் பண்ணிதான் ஃபேமஸ் ஆவேன் என்று நினைத்தேன் ஆனால் இப்படி ஃபேமஸ் ஆயிட்டேன் என்று அவரே சொன்னார். அவரை பற்றி பேசுவது தேவையே இல்லாதது என்றார்.

நேர்காணலுக்காக கேட்டார்

நேர்காணலுக்காக கேட்டார்

பேசிய தயாரிப்பாளர் அப்சா மைதீன் இந்த அலுவகம் என்னுடையது. ஒரு நேர்காணலுக்காக அரை மணிநேரம் இந்த அலுவலகத்தை கேட்டார் கொடுத்தோம். நாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் அடிக்கடி விஎஃப்எக்ஸ் வேலை செய்து பணம் வாங்கி செல்வார்.

ஓனர் கேட்க சொன்னதால்..

ஓனர் கேட்க சொன்னதால்..

ஒரு வருடமாய் அவருடன் பழகியும் அவர் மீது எனக்கு பெரிதாய் நல்ல அபிமானம் வரவில்லை. அதனால் அவரை அவாய்ட் செய்து வந்தேன். ஆனால் அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என எங்கள் ஓனர் சொன்னார். அதனால்தான் அவரிடம் கதை கேட்டேன். என் ஓனர் கேட்க சொன்னதால் கேட்டேன்.

நெகட்டிவாகதான்

நெகட்டிவாகதான்

நான் அக்கவுண்டன்ட்டாக இருந்தேன். அப்போது எங்கள் ஓனரிடம் அடிக்கடி 500 ரூபாய் 1000 ரூபாய் வாங்கி செல்வார். அப்போது குடிக்காமல் இருந்தார். ஆன்மீகவாதியாகதான் இருந்தார். நான்வெஜும் சாப்பிடாமல் இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்ததால் அவரை பற்றி விசாரித்ததில் எல்லாருமே நெகட்டிவாகதான் சொன்னார்கள்.

முருகரை வணங்குவார்

முருகரை வணங்குவார்

சொன்னப்படி நடந்து கொள்ள மாட்டார். அதிகம் பொய் பேசுவார் என்றே எல்லோரும் கூறினார்கள். நல்லா வேலை செய்வார், நல்ல டெக்ஷியன் ஆனால் பொய் பேசுவார். அதிகம் பணம் வாங்குவார். சாமி கும்பிட்டுவிட்டுதான் சாப்பிடுவார். முருகரைதான் வணங்குவார்.

கேர்ள் ஃபிரண்ட்

கேர்ள் ஃபிரண்ட்

அவருக்கு வீடு போரூரில் உள்ளது. அந்த வீட்டுக்கும் நான் தான் 3 வருடமாக வாடகை கொடுக்கிறேன். படம் பண்ண போவதாக சொன்னதால், அவர் கஷ்டத்தில் இருக்கிறாறே என கொடுத்து வருகிறேன். அவர் மனைவியை பற்றியெல்லாம் பேசியதில்லை. அவருக்கு பெங்களூரில் ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறார். எப்போதாவது வருவார்

கேர்ள் ஃபிரண்ட் சந்தேகம்

கேர்ள் ஃபிரண்ட் சந்தேகம்

எலிசபெத் ஹெலன் பற்றி எதுவும் பேசியதில்லை. பணம் இல்லாததால் சரக்கடிச்சதால் அவர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய கேர்ள் ஃபிரண்டுக்கு அடிக்கடி செல்பி எடுத்து அனுப்புவார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் கேர்ள் ஃபிரண்ட் சந்தேகப்படுகிறார் என்பார்.

அவருடைய ஆபிஸ் என்று

அவருடைய ஆபிஸ் என்று

இவரை பற்றி தெரிந்ததால் தான் கேர்ள் ஃபிண்ட் சந்தேகப்பட்டுள்ளார். இந்த ஆபிஸை கூட அவருடைய ஆபிஸ் என்றுதான் இன்டஸ்ட்ரியில் எல்லோரிடமும் கூறி வருகிறார். அந்த இன்டர்வியூவில் கூட அதைத்தான் சொல்கிறார். இது அவருடைய ஆபிஸ் என்று கன்ஃபார்ம் செய்கிறார்.

ஹவுஸ் ஓனர் திட்டுகிறார்

ஹவுஸ் ஓனர் திட்டுகிறார்

இங்கு அவர் தினமும் வந்து வேலை பார்ப்பது போன்றும் வனிதா சமைத்து கொண்டு வருவது போன்றும் காட்டியிருக்கிறார். கட்டிப்பிடித்திருக்கிறார். ஹவுஸ் ஓனர் அந்த வீடியோவை பார்த்து சத்தம் போடுகிறார். ஆபிஸ் எதற்கு விட்டால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார். இவ்வாறு தயாரிப்பாளர் அப்சா மைதீன் தெரிவித்துள்ளார்.

பல விஷயங்கள்

பல விஷயங்கள்

இந்த நேர்காணலை பார்த்த ரசிகர்கள் பீட்டர் பால் குறித்து வனிதாவுக்கே தெரியாத பல விஷயங்கள் வெளியே வரும் போலேயே என தெரிவித்து வருகின்றனர். மேலும் தரமான சம்பவம் கஸ்தூரி என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X