Vijay: ரிலீசுக்கு சூப்பராக தயாராகும் விஜய்யின் GOAT படம்.. அட இந்த வேலையும் ஸ்டார்ட் ஆயிடுச்சா?

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் இணைந்து நடித்துவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு புறம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துவங்கியுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் தன்னுடைய 50 சதவீத டப்பிங் பணிகளை விஜய் முன்னதாகவே முடித்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்த பின்பு மீதமுள்ள டப்பிங் பணிகளையும் அவர் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டீ ஏஜிங் பணிகளுக்காக வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர்.

Producer Archana Kalpathi announces about Vijay s GOAT movie next update

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை வெங்கட் பிரபு பயன்படுத்தியுள்ள நிலையில் இதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அங்கு விஜய்க்கான சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இன்னும் ஒரு சில தினங்களுக்கான ஷூட்டிங் சென்னையில் மீண்டும் நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் டப்பிங் பணிகளில் விஜய்க்கான போர்ஷன்களில் 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்: இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்த பிறகு எஞ்சியுள்ள 50% டப்பிங் பணிகளையும் அவர் நிறைவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தற்போது துவங்கியுள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏராளமான நட்சத்திரங்கள்: செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ், டீ ஏஜிங் பணிகள் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு துரிதப்படுத்தி வரும் சூழலில் அவருக்கு நடிகர் விஜய், சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். படத்தில் விஜய் உடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். கேமியோ கேரக்டர்களில் மட்டுமே நடிகர் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இவ்வளவு ஏராளமான நட்சத்திரங்களை வைத்து வெங்கட் பிரபு வேலை வாங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவனத்தை ஈர்த்துள்ள கோட் படம்: தன்னுடைய படங்களை எப்போதும் விளையாட்டாக எடுத்து முடிப்பவர் வெங்கட் பிரபு. ஆனால் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை மிகவும் கவனமாக அவர் இயக்கி வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று முன்னதாக படத்தின் நடிகர், நடிகைகள் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்துடன் நடிப்பிலிருந்து விஜய் விலகவுள்ள சூழலில், கோட் படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதை படம் எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X