Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டவர்கள் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அடுத்தடுத்து சென்னை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து இரு வாரங்களுக்கு இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் அடுத்த மாதத்தில் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் GOAT படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார். இதில் ஒரு கேரக்டர் வில்லன் கேரக்டராக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பா மற்றும் மகன் கேரக்டர்களில் விஜய் தோன்றும்படியான போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் விமர்சகர்கள் இந்த போஸ்டர்களுக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கேரளாவில் நடந்த நிலையில், அங்கு ரசிகர்கள் விஜய்யை கொண்டாடியதையும் பார்க்க முடிந்தது.

Producer Archana kalpathi confirms about Vijay s GOAT movie first single to be released on April

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்து வரும் சூழலில் அவருக்கு சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்து வருகின்றனர். மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ பயணமாக உள்ளனர்.

ஏப்ரலில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியான நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். அவ்வப்போது அவர்களது கேள்விகளுக்கு வெங்கட் பிரபு மழுப்பலான பதில்களை கூறுவதையும் பார்க்க முடிகிறது. இதனிடையே வரும் ஏப்ரலில் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடைவுள்ளது.

இரு கெட்டப்புகளில் விஜய்: இந்நிலையில் அடுத்ததாக போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் சூழலில் அதற்கான நடவடிக்கைகளில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். படம் டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள சூழலில் அதில் ஒரு கேரக்டர் வில்லன் கேரக்டராக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அழகிய திருமகன் படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் நடித்திருந்த நிலையில் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளது குறித்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ள சூழலில் அந்த பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகுமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக சென்னையில் பாடல் காட்சியுடன் தான் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. அதில் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களுடன் இணைந்து விஜய் ஆட்டம் போட்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த பாடல் வெளியாகுமா என்றும் தற்போது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X