இந்த காரணத்தாலதான் கோட் படத்தோட ஆடியோ லாஞ்ச் வைக்கலை.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கோட் படம் ரிலீசுக்கு சிறப்பான வகையில் தயாராகி உள்ளது. சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக இந்த படத்தை அக்டோபர் மாதத்தில் தான், தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்ததாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

கோட் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் வெங்கட் பிரபு படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தை தான் அக்டோபர் மாதத்தில் ரெடி செய்ய இருந்ததாகவும் ஆனால் விஜய்யின் பிறந்தநாளில் படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் தன்னிடம் அணுகியதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தற்போது செப்டம்பர் ரிலீசுக்கு படம் தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

vijay goat movie archana kalpathi

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அடுத்தடுத்து முன்னெடுத்து வருகின்றனர். மேலும் படத்தின் நடிகர்கள் லைலா, சினேகா, வைபவ் உள்ளிட்டவர்களும் படத்தின் சுவாரசியங்கள் குறித்து அடுத்தடுத்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்திற்கு இசை வெளியீடு நடத்தப்படாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோட் படத்தின் இசை வெளியீடு: விஜய்யின் படங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தான் மாஸ் காட்டும். அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரி ரசிகர்களை தொடர்ந்து அடுத்த பட இசை வெளியீடு வரை உற்சாகமாக வைத்திருக்கும். ஆனால் கோட் படத்திற்கு இசை வெளியீடு வைக்கப்படாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பேட்டியொன்றில் பேசியுள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்திற்கு அதிகமான ஹைப்பை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மொத்தத்தில் படத்தின் இசை வெளியீட்டை நடத்த நேரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இசை வெளியீடு நடத்தாததற்கு காரணம்: படத்தை ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டு மெனக்கெட்டு எடுத்துள்ளதாகவும் பல நாடுகளுக்கு பயணம் செய்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். சில காட்சிகளை மிகவும் அதிகமான முயற்சிக்கு பிறகே எடுக்க முடிந்ததாகவும் படத்தின் பைக் காட்சிக்காக மிக அதிகமாக மெனக்கெட்டு எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். சிஜி வேலைகளும் அதிகமான காலத்தை எடுத்துக் கொண்ட நிலையில், நல்ல படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளதாகவும் அது பேசட்டும் என்று ஆடியோ ரிலீசை அவாய்ட் செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5000 திரையரங்குகளில் ரிலீஸ்: படம் மூன்று மொழிகளில் ரிலீசாகவுள்ளதாகவும் சர்வதேச அளவில் 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, இளம் நடிகரின் லுக்கை மாற்றுவதற்கும் அதிகமான கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் இத்தகைய காரணங்களால் படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்து யோசிக்க வில்லை என்றும் அர்ச்சனா தெரிவித்துள்ளார். படத்தின் பிரமோஷன்களில் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை என்றாலும் படத்தை பார்க்கும் ரசிகர்களின் word of mouthலேயே அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்துவிடும் என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X