மட்ட.. கோட் படத்தின் 4வது சிங்கிள் டைட்டில்.. ஃபேவரிட் பாடல் இதுதான்.. அர்ச்சனா கல்பாத்தி உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக வெளியாகியுள்ள கோட் படம் இன்னும் சில தினங்களில் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக திருவிழா கொண்டாட்ட மூடுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் மிகவும் மாஸாக உருவாகியுள்ள நிலையில், மிகப்பெரிய வைபை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படத்தை சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு. படத்தின் 4வது சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கோட் படம்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடித்து முடித்துள்ள கோட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரசிகர்களை மாஸாக சந்திக்க உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களிலும் வெங்கட் பிரபு, வைபவ், லைலா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் 4வது சிங்கில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னதாக அறிவித்திருந்தார்.
4வது சிங்கிள் அப்டேட்: இந்நிலையில் தற்போது 4வது சிங்கிளின் டைட்டில் Matta என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. மேலும் இளம் விஜய்யின் போஸ்டரையும் இணைத்துள்ளார். நேற்றைய தினம் இளைய தளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா என்றும் கேட்டிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மரண மாஸாக வெயிட்டிங்கில் உள்ளனர். படத்தை கொண்டாட பல விஷயங்களை வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் விஜய்யுடன் முன்னணி ஹீரோக்களான பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்துள்ளனர்.
கொண்டாட விஷயங்கள்: மேலும் 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் கோட் படத்தில் வில்லனாகியுள்ளார். படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என நாயகிகள் கலர்ஃபுல் கலாட்டா செய்ய காத்திருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் திரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு, மறைந்த கேப்டன் விஜய்காந்த் ஆகியோரும் படத்தில் கேமியோ கேரக்டர்களில் மாஸ் காட்டியுள்ளனர். படத்தில் யுவன் இசையில் எப்போதும் இல்லாத வகையில் 2 பாடல்களை பாடியுள்ளார் விஜய். இதில் ஒன்று விசில் போடு என்று அதிரடியாக அமைய மற்றொன்று சின்ன சின்ன கண்கள் என மெலடியாக ரசிகர்களை வருடியது. இதில் மறைந்த பாடகி பவதாரணியை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்திருந்தார் யுவன்.
அர்ச்சனா கல்பாத்தி உற்சாகம்: இந்தப் படத்தின் பாடல்களிலேயே தன்னுடைய ஃபேவரிட் இந்த 4வது பாடல்தான் என அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ள நிலையில், இந்தப் பாடலுக்கு தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து படத்தில் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகவுள்ள பாடல் அதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்த போதிலும் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிவிடும்.


Click it and Unblock the Notifications











