Vijay: சின்ன சின்ன கண்கள்.. நாளை ரசிகர்களுக்கு விருந்தாகும் விஜய்யின் கோட் பட 2வது பாடல்!

சென்னை: நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப்படம் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

யுவன் சங்கர் ராஜா கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளார். இந்நிலையில் நாளைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

Vijay The greatest of all time movie Venkat prabhu Archana kalpathi tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டு சென்னை, ஐதராபாத், பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாகவே தனது போர்ஷன்களை விஜய் முடித்துக் கொடுத்துவிட்டார். இதேபோல படத்தின் டப்பிங் வேலைகளையும் அவர் நிறைவு செய்த நிலையில் படத்தில் மகன் விஜய்க்கான டீ ஏஜிங் வேலைகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று திரும்பினர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம்: இந்தப் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் பாடலில் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அதிரடியாக ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது. இருந்தபோதிலும் இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2வது சிங்கிள் நாளைய தினம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் 2வது சிங்கிள்: முதல் சிங்கிளில் அதிரடியாக தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார் விஜய். இந்நிலையில் 2வது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஒரு சின்ன ட்ரீட் என அவர் போஸ்டருடன் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இந்த போஸ்டரில் குடை பிடித்தபடி நடிகர் விஜய், தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் ஷாப்பிங் பேக்குகளுடன் காணப்படுவதாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது அப்பா விஜய்யின் பாடலாக இந்தப் பாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்ன சின்ன கண்கள் பாடல்: சின்ன சின்ன கண்கள் என இந்தப் பாடல் நாளைய தினம் வெளியாகவுள்ளது. முதல் பாடல் சிறப்பான வகையில் விசில் போட்டது. ஆனால் ரசிகர்களை அதிகமாக விசில் போட வைக்க தவறியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது பாடல், சின்ன சின்ன கண்களால் ரசிகர்களை வசீகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் விஜய்யின் இரட்டை கெட்டப்பிற்கு வித்தியாசம் காட்டும்வகையில் மகன் விஜய் கேரக்டருக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்கநர் பயன்படுத்தியுள்ளார். இந்தப் படம் மிகவும் வித்தியாசமான விஜய்யை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என முன்னதாக படத்தில் நடித்துள்ள நடிகை லைலா கூறியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X