GOAT படம் பற்றி வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்.. தயாரிப்பாளர் கொடுத்த செம விளக்கம்
சென்னை: வெங்கட் பிரபு கோலிவுட்டில் இப்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்த அவர் தற்போது GOAT படத்தை இயக்கிவருகிறார். பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவருகிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்திருக்கிறார்.
கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நட்பு, கிரிக்கெட் ஆகியவைகளை மையமாக வைத்து படு ஜாலியாக அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அவர். படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக முதல் பட இயக்குநர் போன்றே அவர் பணியாற்றவில்லை. அனுபவம் மிக்க இயக்குநர் போல் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

அடுத்தடுத்த ஹிட்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சரோஜா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக த்ரில்லர் ஜானரிலும் தான் கைதேர்ந்தவர் என்பதை வெங்கட் பிரபு அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் தோல்வியடைந்தது. படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் படம் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது என்றும்; ரொம்பவே கேஷுவலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.
மெகா ஹிட்: வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் அதிரிபுதிரி வரவேற்பை பெற்றது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.
GOAT:மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
வதந்திகளை பரப்பாதீர்கள்: சூழல் இப்படி இருக்க செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகாது என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "கோட் திரைப்படத்தின் ரிலீஸுக்காக நாங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் விடாமல் உழைத்துக்கொண்டு வருகிறோம். கண்டிப்பாக சொன்னபடி கோட் திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸாகும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனவே வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்"" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











