தில்ராஜ் திவால் ராஜ் ஆகிவிட்டார்..ஷங்கரால் வீட்டை விற்று தெருவுக்கு வந்துட்டாரா?விமர்சித்த பிரபலம்!

சென்னை: 2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கேம் சேஞ்சர். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ,கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மண்டமாக உருவான இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்து வரும் நிலையில், ஷங்கரால் தயாரிப்பாளர் தில் ராஜ் தெருவிற்கு வந்துவிட்டார் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த, தயாரிப்பாளர், பாலாஜி பிரபு,

தயாரிப்பாளர் தில் ராஜ், தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் தயாரிப்பாளராக இருந்தார். பல தெலுங்கு படங்களை எடுத்து நன்றாக சம்பாதித்து, மகிழ்ச்சியோடு சுபிட்சமாக இருந்தார். எப்பொழுது, தமிழ் சினிமாவிற்கு வந்து தயாரிப்பாளராக ஆனாரோ அதிலிருந்து அவருக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திற்கு அள்ளி செலவு செய்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் எடுக்க நினைத்தார். இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜின் கதை. சங்கரை விட கில்லாடியானவராக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சங்கரின் முதல்வன் படத்தின் கதையை அப்படியே உள்டாவாக்கி அவரிடமே விற்றுவிட்டு காசு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

game changer ramcharan shankar

படத்தை யாரும் வாங்கவில்லை: கேம் சேஞ்சர் படத்தை 450 கோடி ரூபாய் செலவில் எக்கச்சக்கமாக செலவு செய்து எடுத்திருக்கிறார்.ஒரு பாட்டுக்கு பல கோடி என, ஒரு திட்டமே இல்லாமல் என்னென்னமோ செலவு செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வி, கேம் சேஞ்சர் படத்தை பெரிய அளவில் பாதித்தது. இதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் வியாபாரமே ஆகவில்லை. அதே போல, ராம் சரணுக்கு பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் இல்லை என்பதும் படத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

வீட்டை அடமானம் வைத்து: இந்த படத்தை தில் ராஜ் சில சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் படத்தை எடுத்து இருக்கிறார். அந்த சொத்துக்கள் எல்லாம் மீட்க முடியாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. தில்லாக படம் எடுக்க வந்த தில் ராஜ் இன்று சங்கரால் திவால் ராஜ் ஆகிவிட்டார். விஜய் நடித்த வாரிசு படம் 450 கோடி ரூபாய் வசூல் என்பது உண்மை தான் ஆனால், அந்த படத்திற்கு ஆன செலவு அதைவிட அதிகம். 400 கோடி பணம் போட்டு படம் எடுக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு 450 கோடி வரவு வந்தால் மட்டுமே அது தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமாக இருக்க முடியும். வெறும் 10% லாபம் வந்தால் அதை எப்படி லாபமாக எடுத்துக் கொள்ள முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X