கிங் காங் மகள் திருமணம்.. ஒரு லட்சம் மொய் வைத்த வடிவேலு.. அத்தனையும் நடிப்பாம்.. விளாசிய பிரபலம்

சென்னை: நடிகர் கிங் காங் தனது மகள் கீர்த்தனாவுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். திருமணத்துக்கு பிறகு நடந்த வரவேற்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். வடிவேலுவால் கலந்துகொள்ள முடியாததால் தன்னுடைய மேனேஜரை அனுப்பி வைத்தார். மேலும் அவர் கவரில் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கிங் காங் ஒரு பேட்டியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கிங் காங் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் பத்திரிகை வைத்தார். அவர் பத்திரிகை வைத்த சமயத்தில் சமூக வலைதளம் முழுவதுமே அவர் அழைப்பிதழ் கொடுக்கும் புகைப்படங்கள்தான் பரவியிருந்தன. ஒருதரப்பினரோ வழக்கம்போது இதனையும் வைத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அவர் இதனையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பிரமாண்ட ரிசப்ஷன்: பெசன்ட் நகர் முருகன் கோயிலில் சிம்ப்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. அதனையடுத்து தனியார் மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. திருமாவளவன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். மேலும் ஏராளமானோர் கலந்துகொண்டதால் கட்டுக்கடங்காத கூட்டமாகவே மண்டபம் இருந்தது.

Producer Balaji Prabhu criticizes Vadivelu for not attending King Kong s daughter s wedding
Photo Credit:

ஏமாற்றிய திரைத்துறையினர்: கிட்டத்தட்ட திரைத்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிங் காங் பத்திரிகை வைத்தார். இருப்பினும் அதில் பாதிபேர்கூட ரிசப்ஷனுக்கோ,திருமணத்துக்கோ வரவில்லை. அது விமர்சனத்தை சந்தித்தது. அதேசமயம் திருமணம் முடிந்த சில நாட்களில் நடிகர் சிவகார்த்திகேயன் கிங் காங் வீட்டுக்கு நேராக சென்று மணமக்களை வாழ்த்தினார். அதேபோல் வடிவேலுவும் ஃபோனில் தொடர்புகொண்டு பேசினார்.

என்ன பேசினார்?: அவர் கிங் காங்கிடம் பேசுகையில், "உங்கள் மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்ததே தமிழ்நாட்டிலிருந்து எட்டரை கோடி பேரும் வந்தது போன்றது. அத்தனை பேரும் வந்தாலும் உங்கள் வீடு தாங்குமா?..நீங்கள் பத்திரிகை வைத்தவர்கள் வரவில்லை என்று பலர் உசுப்பேத்துவார்கள். அதை நினைத்தெல்லாம் கவலைப்படாதீர்கள். அதான் முதலமைச்சரே வந்துவிட்டாரே" என குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் அவர் மொய் வைத்ததாக கிங் காங்கும் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

எல்லாம் நாடகம்?: இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "திரைத்துறையில் எல்லோருமே வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் கிங் காங் பத்திரிகை வைத்தார். அவரை எவ்வளவோ பேர் கிண்டல் செய்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாங்கித்தான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார். எனவே அனைவருமே வர வேண்டும் என்று விருப்பப்பட்டிருப்பார்.

வடிவேலு ஏன் வரவில்லை?: வர வேண்டும் என்று நினைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருக்கலாம். கேன்சல் செய்ய முடியாத அளவுக்கு ப்ரோகிராம் என்று எதுவுமே இல்லை. வடிவேலு ஃபோனில் பேசுகிறார். அப்போது ஏன், 'மேனேஜர் கொடுத்தாங்களா' என்று கேட்க வேண்டும். அப்போ என்ன அர்த்தம், 'பணம் கொடுத்ததை வெளியே சொல்கிறாரா வடிவேலு?'. அவர் பணம் கொடுத்ததைவிட வந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி கிங் காங்கிற்கு கிடைத்திருக்கும். சினிமாவில் வடிவேலு நடிக்கலாம். நிஜத்தில் ஏன் நடிக்க வேண்டும்" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X