கிங் காங் மகள் திருமணம்.. வராத விஜய்.. கீர்த்தி சுரேஷ் திருமணம்னா போவாரா?.. பிரபலம் கேள்வி
சென்னை: நடிகர் கிங் காங் அண்மையில் தனது மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமண வரவேற்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அடுத்தடுத்த நாட்களில் சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்திவந்தார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் கிங் காங்கிற்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். அவர் நவீன் என்பவரை காதலித்த சூழலில்; அந்தக் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திரையுலகில் கிட்டத்தட்ட அனைவருக்குமே பத்திரிகை வைத்தார். அனைவரும் வர வேண்டும் என்ற ஆசையோடு வைத்த கிங் காங்கை; ஒருதரப்பினரோ, ' பணத்துக்காக வைக்கிறார்' என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.
முதலமைச்சர் வந்தார்: கோயிலில் வைத்து சிம்ப்பிளாக திருமணம் முடிந்ததை தொடர்ந்து; தனியார் மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். மேலும் திரைத்துறையிலிருந்து குறிப்பிட்ட பேர் மட்டுமே வந்திருந்தார்கள். கூட்டம் காரணமாக மண்டபத்தின் வாசல்வரை வந்து தேவயானி திரும்ப சென்றுவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன்: திருமணத்தன்று கலந்துகொள்ள முடியாததால்; அடுத்த நாள் கிங் காங்கின் வீட்டுக்கு சென்று கீர்த்தனாவையும், நவீனையும் வாழ்த்திவிட்டு வந்தார் சிவகார்த்திகேயன். சிவாவின் தீவிர ரசிகை கீர்த்தனா என்பது கவனிக்கத்தக்கது. எஸ்கேவை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானும் வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டும், ஆசீர்வாதம் செய்துவிட்டும் வந்தார்.
கண்டனங்கள்: இவர்கள் தவிர்த்து வராத நடிகர்கள், நடிகைகளை எல்லாம் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசுகையில், "கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு தனி விமானத்தில் திரிஷாவையும் அழைத்துக்கொண்டு கோவாவரை சென்று கலந்துகொண்டார் விஜய். அதேபோல் ஜேபிஆர் வீட்டு திருமணத்துக்கும் சென்றார்.
இங்கு ஏன் வரவில்லை?: ஜேபிஆர் எல்லாம் பெரிய கோடீஸ்வரர். கல்வி தந்தை என்று அழைக்கப்படுபவர். அதனால் அங்கு சென்றுவிட்டார் விஜய். இத்தனைக்கு கிங் காங் மகள் திருமணம் நடந்த அடுத்த நாள்தான் அந்தத் திருமணம் நடந்தது. கீர்த்தி சுரேஷ், ஜேபிஆர் இல்ல திருமணத்தில் எல்லாம் கலந்துகொள்ளும் விஜய் ஏன் எளியவரான கிங் காங் மகள் திருமணத்துக்கு வரவில்லை?. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களின் மரணத்துக்குக்கூட போகாதவர்தான் விஜய்" என்றார்.


Click it and Unblock the Notifications











