நவரச நாயகன் கார்த்திக்கின் லீலைகள்.. ஆத்தாடி அந்தக் காலத்தில் இப்படி ஆடிருக்காரே.. செம டெக்னிக்கல் ப்பா

சென்னை: நவரச நாயகன் கார்த்திக் பற்றி அவரது மாடுலேஷனிலேயே இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் பேசியதிலிருந்து பலரும் கார்த்திக் குறித்து பேசிவருகிறார்கள். அதன் மூலம் திரைத்துறையில் அவர் எவ்வளவு சொகுசாகவும், பிறருக்கு சங்கடத்தை கொடுத்தும் வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியந்திருக்கிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஃபில்மிபீட் தமிழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக்கை பாரதிராஜா திரைத்துறையில் அறிமுகம் செய்துவைத்தார். பாரதிராஜாவின் அறிமுகத்தோடு கார்த்திக்குக்கு மிகப்பெரிய திறமை இருந்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்துக்கு செல்ல ஆரம்பித்தார் அவர். மணிரத்னம் உள்ளிட்ட முக்கியமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.

சேட்டைகள் செய்த கார்த்திக்: கார்த்திக்தான் 80கள் மற்றும் 90களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். இரண்டு திருமணங்களை செய்திருந்த அவர் பல பெண்களுக்கு ஃபேவரைட்டாக இருந்தார். தான் திரைத்துறையில் இருந்தவரை உச்சக்கட்ட சொகுசாகவே இருந்தார். ஆனால் அந்த சொகுசு மற்றவர்களுக்கு பெரிய தொல்லையாக இருந்தது என்பதுதான் துரதிர்ஷ்டவசமான ஒன்று. பலரிடம் பணத்தை வாங்கி சரியாக தேதிகள் கொடுக்காமல் இழுத்தடிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.

Producer Balaji Prabhu Exposes Karthik s Hidden Side Advance Money Missing Dates amp amp Shocking Behaviour

பாரதி கண்ணன் பேட்டி: அவர் தற்போது ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் இயக்குநரு, நடிகருமான பாரதி கண்ணன் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் கார்த்திக்கிடம் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை கலகலப்போடு பகிர்ந்துகொண்டார். அப்போதிருந்து கார்த்திக் சோஷியல் மீடியான் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார்கள்.ஒவ்வொன்றாக அவர் செய்த சேட்டைகள் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பேட்டியில், "கார்த்திக் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரது சில பெர்சனல் கேரக்டர்கள் பிரச்னையை கொடுக்கக்கூடியவை. ஒரு தயாரிப்பாளரிடம் பத்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டு தேதிகள் கொடுக்கமாட்டார். மாறாக பணத்தை வாங்கிக்கொண்டு தனது மேனேஜரை வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்ல சொல்வார்.

பட்டை போட்டு இருப்பார்: அவரும் அப்படி சென்ற பிறகு பூட்டிய வீட்டுக்குள் ஜாலியாக இருப்பார். அவர் வெளியே வர வேண்டுமென்றால் மேனேஜரை திருப்பி அழைத்து வெளியே வந்து யாருக்கும் தெரியாமல் இன்னொரு பக்கமாக காரில் போய்விடுவார். அட்வான்ஸ் வாங்கிய தயாரிப்பாளருக்கு ஃபோன் செய்து மீண்டும் ஒரு ஐந்து லட்சம் கொடுப்பார். அவரும் பணத்தை எடுத்துக்கொண்டு போவார். அப்படி போகும்போது மட்டும் பட்டையை போட்டுக்கொண்டு வீட்டில் பவ்யமாக இருப்பார். அதற்கு பிறகு அந்தத் தயாரிப்பாளரால் கார்த்திக்கை பத்து மாதங்கள் ஆனாலும் பார்க்க முடியாது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X