நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடந்தது தெரியும்?.. அதற்கு பின்னால் என்ன நடந்தது தெரியுமா?.. சூப்பர் ப்ளான்

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். அவருக்கு இருக்கும் இரண்டு மகன்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கும் அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானவர் நெப்போலியன். அதன் பிறகு வில்லன், ஹீரோ என கலந்துகட்டி நடித்தார். தனக்கு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்யக்கூடியவர் அவர். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்த அவர் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் தனுஷுக்கு தசை சிதை நோய் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன்: எனவே தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்று செட்டில் ஆன நெப்போலியன்; அங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். மேலும் ஏக்கர் கணக்கில் விவசாயமும் செய்கிறார். சூழல் இப்படி இருக்க தனக்கு பிறகு தனது மகனுக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரும், அவரது மனைவியும் முடிவு செய்தார்கள். அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை தேர்ந்தெடுத்தார்கள்.

Producer Balaji Prabhu has spoken about Napoleon s son Dhanush s marriage
Photo Credit:

ஜப்பானில் கல்யாணம்: அக்‌ஷயாவும் இந்தத் திருமணத்துக்கு முழு மனதோடு ஒத்துக்கொண்டதால் இவர்களின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக கடந்த வருடத்தில் நடைபெற்றது. இதில் மீனா, சரத்குமார், ராதிகா, பாண்டியராஜன் என நட்சத்திர பட்டாளம் கலந்துகொண்டது. மேலும் சிவகார்த்திகேயன் வீடியோ காலிலும், ரஜினிகாந்த் ஃபோன் காலிலும் தம்பதிக்கு வாழ்த்து சொன்னார்கள். இப்போது தனுஷும் அக்‌ஷயாவும் மகிழ்ச்சியோடு தங்கள் நாட்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி: சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாக நெப்போலியன் வீட்டில் பிரச்னை என்றும்; அக்‌ஷயா தனது தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார் என்றும் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்த அவரை நெப்போலியன் குடும்பமே வரவேற்றது. அதுமட்டுமின்றி அமெரிக்க சட்டப்படியும் திருமணம் நடந்து முடிந்தது.

பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கையில், "இந்தத் திருமணத்தில் அக்‌ஷயாவுக்கு முழு சம்மதம்தான். திருமணம் செய்து வைப்பதற்கு முன்பு அக்‌ஷயாவிடமும், தனுஷிடமும் நீங்கள் இரண்டு பேரும் முதலில் இரண்டு மூன்று மாதங்களாவது ஃபோனில் பேசுங்கள். ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். இரண்டு பேருக்கும் ஒத்த கருத்து இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

அதன் பின்பு இரண்டு பேருமே ஃபோனில் பல நாட்கள் பேசி பழகினார்கள். அக்‌ஷயாவுக்கும், தனுஷுக்கும் ஒத்துப்போனது. மூன்று மாதங்கள் கழித்து இரண்டு பேரிடமும் ஓகேயா என்று கேட்டுவிட்டுதான் திருமணம் செய்து வைத்தார். நெப்போலியனின் மகனுக்கு ஜப்பான் ரொம்பவே பிடிக்கும். அவரது ஆசைப்படிதான் ஜப்பானில் தனுஷ் - அக்‌ஷயா திருமணம் நடத்தப்பட்டது" என்றார். அவரது இந்தப் பேட்டி கவனம் பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X