எல்லாமே நடிப்பா கோபால்.. நயனுக்குத்தான் சீப் பப்ளிசிட்டி தேவை.. விஷாலுக்கு இல்லை.. விளாசிய தயாரிப்பாளர்!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியாகி உள்ளது. இதன் ப்ரிவ்யூ ஷோவில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய விஷால், சாதாரண வைரல் காய்ச்சல் தான், குணமாகிவிட்டது. அன்றைக்கு கொஞ்சம் காய்ச்சல் அதிகமாக இருந்தது. அந்தச் சந்திப்புக்கு போக வேண்டாம் என்று அப்பா, அம்மா சொன்னார்கள். நான் தான் சுந்தர்சிக்காக வந்தேன்.

என் உடல் நிலை குறித்து வந்த செய்திகளை பார்த்து கஷ்டப்பட்டேன். இருந்தாலும், என்னை எத்தனை பேர் நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன் என்றார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, சிலர் படத்தின் ப்ரோமோஷனுக்காக விஷால் மேடையில் அப்படி நடித்தார் என்ற கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

vishal madha gaja raja balaji prabhu

இந்த எண்ணமே தவறு: இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, இன்றைய தமிழ் சினிமாவில் விஷால் ஒரு முக்கியமான நடிகராக இருக்கிறார். அப்படி இருக்கும் ஒருவர், படத்திற்காக படத்தின் பிரமோஷனுக்காக கை நடுங்கும்படி பேசினார் என்று சொல்வதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுமட்டுமல்லாமல் விஷால் ஒரு ஆக்சன் ஹீரோ, அப்படி இருக்கும்போது, படத்தின் ப்ரோமோஷன்காக கை நடுங்கும்படி நடித்தார் என்றால் அவரின் இமேஜ் என்ன ஆகும். பின் தயாரிப்பாளர்கள் எப்படி இவருக்கு படவாய்ப்பு கொடுப்பார்கள். மேடையில் நடித்தார் என்று சொல்வதே ஒரு கொடூரமான எண்ணம் தான். இப்படி சொல்பவர்களை நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.'

சீப் பப்ளிசிட்டி: யாரும் படத்திற்காக இப்படி சீப்பான பப்ளிசிட்டி செய்ய மாட்டார்கள். நயன்தாராவிற்கு இரண்டு ஆண்டுகளாக சரியாக படம் இல்லை என்பதற்காக அவரின் ஆவணப்படம் வரவேற்பை பெறவேண்டும் என்பதற்காக தனுஷ் உடன் சண்டை போட்டு பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் பப்ளிசிட்டி செய்து கொண்டார். இது, நயன்தாரா போன்ற ஒரு சிலரால் மட்டும் தான் செய்ய முடியும், அந்த மாதிரியான பப்ளிசிட்டி விஷால் அவர்களுக்கு தேவையில்லை. அவர் மேடையில் நடித்தார் என்று சொல்லுவது தவறானது கண்டிக்கத்தக்கது. விஷால் தற்போது நல்லபடியாக உடல்நலம் தேறி வந்து இருக்கிறார். அவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களை நல்ல நிலைமையில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு பிடிக்கும்: விஷாலின் உடல்நிலை சரியில்லை என்பது உண்மை தான், பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்ததில் இருந்தே விஷாலுக்கு பிரச்சனை தான், அந்த படத்திற்காக அவர் கண் சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு அவருக்கு ஒற்றை தலைவலி தீரவே இல்லை. அந்த தலைவலிக்காக தற்போது வரை அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த பிரச்சனைக்கு விஷால் அவன் இவன் படத்தில் நடித்து இருக்கவே வேண்டாம். இருந்தாலும் பாலாவின் மீதுள்ள பிரியத்தால், அந்த படத்தில் நடித்து விட்டார். ஆனால், தற்போது அவருக்கு காய்ச்சல் தான் அது சரியாகி விட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதகஜராஜா படம் வெளியாகி இருக்கிறது. அந்த படத்திற்கு 12 வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த படத்தை விஷாலின் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X