இயக்குநர் வி.சேகரின் கலங்க வைக்கும் இறுதி காலம்.. மூளை முழுக்க ரத்தம்.. Rapido ஓட்டும் மகன்.. இவ்வளவு வலியா?
சென்னை: இயக்குநர் வி.சேகர் உடல்நல குறைவால் நேற்று போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் உயிரிழந்தார். இன்று அவரது உடல் மருத்துவமனையிலிருந்து இயக்குநர் சங்கம் வழியாக எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனையடுத்து அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தில் இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்களை எடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் வி.சேகர். பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து தொழிலை கற்றுக்கொண்டு நீங்களும் ஹீரோதான் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு வரிசையாக குடும்ப பாங்கான படங்களை எடுத்தார். அப்படி அவர் எடுத்த, 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப்போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என பல ஹிட் படங்களை கொடுத்தார்.
அந்த விஷயத்தில் கில்லி: பொதுவாக குடும்ப பாங்கான படங்கள் எடுக்கப்பட்டால் அதில் எமோஷனை அதிகம் வைத்து காமெடியை குறைத்துவிடும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. அதனை மாற்றிக்காட்டியவர் சேகர்தான். அவர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அத்தனையும் இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு, விவேக்: முக்கியமாக வடிவேலு, விவேக் ஆகியோரை தனது படங்களில் நிறையவே பயன்படுத்தியிருந்தார். அதிலும் அவர்கள் இரண்டு பேரும் உள்ளே வந்தபோது கவுண்டமணி, செந்தில் பீக்கில் இருந்தார்கள். அவர்களையும் தனது படத்தில் நடிக்க வைத்து வடிவேலு, விவேக்கையும் நடிக்கை வைத்து பேலன்ஸாக சென்றார். வடிவேலு, விவேக் ஆகியோரின் வளர்ச்சியில் கண்டிப்பாக சேகரின் பங்கு நிறையவே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
உயிரிழந்த சேகர்: இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்த அவர் ஏய் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். அவரது மகன் கார்ல் மார்க்ஸை வைத்து சரவண பொய்கை என்ற படத்தையும் எடுத்தார். ஆனால் அதை ரிலீஸ் செய்ய முடியவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனையொட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சொந்த ஊரில் இறுதி சடங்கு: அவரது உயிரிழப்பு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவமனையிலிருந்து கோடம்பாக்கத்திலிருந்து அவரது வீட்டுக்கு உடல் எடுத்து செல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான வேட்டவலம் கிராமத்தில் அவருக்கான இறுதிச்சடங்கு நடக்கும் என்று இயக்குநர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு சேகர் குறித்து பேசியிருக்கிறார்.
பாலாஜி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "வி.சேகருக்கு சிறந்த இயக்குநர். அவர் தயாரிப்பாளராகவும் இருந்தர். ஏய் என்ற படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்தார். அதுமட்டுமின்றி தனது மகன் கார்ல் மார்க்ஸை வைத்து சரவண பொய்கை என்ற படத்தையும் தயாரித்தார். ஆனால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். அவரை சந்திக்க வருபவர்களிடம் எல்லாம், 'விவேக் மட்டும் இருந்திருந்தால். எப்படியாவது எனக்கு உதவி செய்திருப்பார்' என்று புலம்பியிருக்கிறார். அவர் பத்து நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் விழுந்துவிட்டார். அப்போது அவருக்கு மூளையில் இருக்கும் நரம்பு வெடித்து மூளை முழுக்க ரத்தம் உறைந்துவிட்டது. பிறகு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவரது மகன் கார்ல் மார்க்ஸ் இப்போது Rapido ஓட்டிக்கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவர்களது நிலைமை இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











