Jana Nayagan vs Parasakthi: ஜன நாயகனுக்கு எதிராக சதி நடக்குது.. பிரபலம் சொன்ன ஷாக் ரிப்போர்ட்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான, ஜன நாயகன். இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 10ஆம் தேதியே ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஜன நாயகனுக்கு எதிராக சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நமது பிலிமி பீட் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். அதாவது, " ஜன நாயகன் படம், விஜய் போன்ற மாஸ் நடிகர் நடித்த படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ஜனவரி 13ஆம் தேதி வரை ஓடினால், உலக அளவில் மிகப்பெரிய வசூலை எட்டும். அதை விஜய் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.

இதை முறியடிக்கும் விதமாக பராசக்தி படத்தை திட்டமிட்டே 10ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். இதற்கு காரணம் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் தான். அதுவும் ஈரோட்டில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் விஜய் பேசிய பின்னர் 10ஆம் தேதியே பராசக்தி படத்தை வெளியிட படக்குழு, திட்டமிட்டு விட்டது. விஜய் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார். இதனால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அவர்கள் இது போன்ற நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு தான்.
பொய் பாசம்: சினிமாவைப் பொருத்தவரை அண்ணன் - தம்பி, அக்கா - தங்கச்சி என்ற பாசங்களுக்கு எல்லாம் இடமில்லை. சினிமாவில் யாரும் உண்மையான அன்பைக் காட்ட மாட்டார்கள். உண்மையான அண்ணன் - தம்பி பாசம் எங்காவது இருக்கலாமே தவிர, மீதி 99 சதவீதம் பொய்யான பாசம் தான். விஜய்க்கு திரையுலகில் போட்டியே ரஜினிதான். அதே நேரத்தில் சிவகார்த்திகேயனையும் குறைத்து மதிப்பிட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

ரிலீஸ் தேதிகளில் மாற்றம்: முதலில் ஜன நாயகன் படத்தை 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடுவதாக தெரிவித்தனர். அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதி என்று ரிலீஸ் தேதியை மாற்றினர். அதேபோல் பராசக்தி படத்தை ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக முதலில் அறிவித்தனர். இந்நிலையில் இன்று அதாவது, டிசம்பர் 22ஆம் தேதி படக்குழு அறிவித்த, அறிவிப்பில், படத்தை ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











