ஷங்கருக்கே வேட்டுவைத்த கார்த்திக் சுப்புராஜ்..வேள்பாரி சோலி முடிஞ்சுது.. தயாரிப்பாளர் ஆதங்கம்!

சென்னை: சங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே,சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி நடிப்பில் பொங்கல் பாண்டிகையையொட்டி நேற்று கேம் சேஞ்சர் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இந்தியன் 2 படத்தின் தோல்வியால் துவண்டு போன சங்கர், இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படமும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருவதால், கார்த்திக் சுப்புராஜ் சங்கருக்கு வேட்டு வைத்துவிட்டார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

கேம் சேஞ்சர் திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படம் கிடையாது. தெலுங்கு ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டு, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படம். அதுமட்டுமல்லாமல், ராம் சரணுக்கு தமிழ் ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பு இருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனென்றால் தமிழ் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் ராம்சரண் ஒரு தெலுங்கு நடிகர். அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு இவர்களுக்கெல்லாம் தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ராம்சரணுக்கு அப்படி இல்லை.

game changer director shankar ramcharan

அதில், கேம் சேஞ்சர் படம் வழக்கமான ஒரு சங்கர் திரைப்படம் தான். இந்த படத்தை பார்க்கும் போது, சங்கர் இன்னும் நிறைய அப்டேட் ஆக வேண்டியிருக்கிறது. புது புது விஷயங்களை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஜென்டில்மேன், காதலன், முதல்வன் என வித்தியாச படங்களை தந்தவர் சங்கர். தற்போது அவரின் படங்களில் வித்தியாசங்கள் குறைந்துவிட்டது. இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜின் கதை. இந்த கதை, முதல்வன் திரைப்படம் போல இருப்பதாக பலர் கருத்துக்களை கூறி வருகின்றார்கள். இந்த கதையை சங்கர் அவரிடமிருந்து வாங்கி இருக்கவே வேண்டாம். முதல்வன் படத்தையே முதல்வன் 2 என்று எடுத்திருந்தாலே நன்றாக இருந்து இருக்கும்.

மிகப்பெரிய சரிவு: கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து கதையை வாங்கும் அளவிற்கு ஷங்கரிடம் கதை பஞ்சம் வந்துவிட்டதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது. கார்த்திக் சுப்புராஜ், இந்த கதையை கொடுத்து சங்கருக்கு வேட்டு வைத்து இருக்கிறார். முன்பு சங்கருடன் எழுத்தாளர் சுஜாதா இருந்தார். அவர் சங்கருக்கு பல ஆலோசனைகளை வழங்கி ஒரு படத்தின் கதையை மெருகேற்றினார். தற்போது அவர் உயிரோடு இல்லாததால், சங்கர் தடுமாறி வருகிறார். அவரின் மிகப்பெரிய சரிவுக்கு எழுத்தாளர் சுஜாதா இல்லாதது தான் முக்கிய காரணம். அவர் இல்லை என்பதற்கான முடங்கிவிடக்கூடாது சுஜாதா போல வேறு ஒருநபரை தேடிவேண்டும். ஆனால், சங்கர் அதை செய்ய தவறிவிட்டார்.

வேள்பாரி எடுத்தா அவ்வளவுதான்: சங்கர் அடுத்ததாக ஆயிரம் கோடியில் மூன்று பாகமாக வேள்பாரி படத்தை இயக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு ஆயிரம் கோடி செலவு செய்ய எந்த தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். வேள்பாரி படத்தை சங்கர் தயாரிப்பாரா, ஆயிரம் கோடியை செலவு செய்து அந்த படத்தை அவர் எடுக்க தயாரா? பிரம்மாண்டம் என்கிற பெயரில் தயாரிப்பாளர்களை ஒன்னும் இல்லாமல் செய்துவிட்டு, இப்போது தயாரிப்பாளர்களே இல்லை. இந்தியன் 2 படத்தின் தோல்வி, கேம் சேஞ்சர் படத்திற்கு வந்திருக்கும் மோசமான விமர்சனங்களால், லைகா நிறுவனம் லண்டனில் தனது கம்பேனியில் ஆட்குறைப்பை செய்துவிட்டது. இனி இந்தியன் 3 படத்தை தயாரிக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நேரத்தில் வேள்பாரி எடுத்தால் அவ்வளவு தான் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X