சறுக்கிய விடாமுயற்சி.. 800 கோடி போச்சு.. கஷ்டத்தில் லைகா.. விஜய்யின் மகன் படத்தின் கதி என்ன?
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் ஆரவாரமின்றி வெளியானது. இப்படம்விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. அதற்கு காரணம் அஜித்தின் மாஸ் காட்சிகள் இல்லை, வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல், வித்தியாசமாக இருந்ததால் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், விடாமுயற்சி திரைப்படம் நான்கு நாட்களில் 100 கோடியை வசூலித்து இருக்கிறது என்பது உண்மை தான்.ஆனால் அஜித்தின் படத்திற்கு இந்த வசூல் மிகவும் குறைவானது. அவரின் படத்திற்கு வரும் வழக்கமான வசூல் இது இல்லை. படம் வெளியான இரண்டு, மூன்று நாட்கள் மட்டும்தான் படம் பிஸியாக இருந்தது. திங்கள்கிழமைகளில் இருந்து படத்தின் வசூல் மோசமாகத்தான் இருக்கிறது. இது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. விடாமுயற்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம், மிகப்பெரிய அளவில் வசூலை பெறும் என எதிர்பார்த்த படம் இப்போது வசூலில் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

சறுக்கிய விடாமுயற்சி: அதற்கு காரணம், விடாமுயற்சி படம் அஜித் நடிப்பதற்கான திரைப்படமே இல்லை. ஏனென்றால் அஜித் ஒரு மாஸ் ஹீரோ, அப்படி இருக்கும் போது அஜித் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.அஜித் ஒரு ஆக்ஷன் ஹீரோ, மக்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ, இந்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்கே பல பிரச்சனைகள், தடைகள் இருந்த போதும், இந்த படத்திற்காக ரசிகர்கள் சோர்வடையாமல் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்கள். அஜித் தல சொல்லாதீங்க, கடவுளே அஜித்தே சொல்லாதீங்க என்று சொன்னாலும், விடாமுயற்சி படத்தின் முதல் நாள் காட்சியில் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று தான் கத்தினார்கள். இப்படி மக்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகன், எப்படி ஒரு சாதாரணமான படத்தில் நடித்தார் என்று தெரியவில்லை.
மோசமான கதை தேர்வு: விடாமுயற்சி படத்தின் முதல்ப 50 நிமிடம் படத்தில் ஒன்னுமே இல்லை, படம் மிகவும் தொய்வாகத்தான் செல்கிறது. இந்த படத்தில் த்ரிஷா, அஜித்துடன் 12 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, எனக்குவேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு போகிறார். இது நம் கலாச்சாரத்திற்கு ஒத்துவராத கதை. அதுமட்டுமில்லாமல் படத்தில் வருகிறவன் போகிறவன் எல்லாம், அஜித்தை அடிக்கிறார்கள், இதை எப்படி அஜித்தின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த படத்தை அஜித் ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. ஒரேவேளை இந்த வயதிற்கு மேல், இதுபோன்ற கதையில் நடிக்கலாம் என்று அஜித் நினைத்து இருக்கலாம். ஆனால், படம் எடுபடவில்லை.
தொடர்ந்து கஷ்டம்: சந்திரமுகி, லால்சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என லைகா நிறுவனம் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இதில், லைகா நிறுவனத்தை நாம் குறை சொல்ல முடியாது. ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், லைகா நிறுவனம் சரியான கதையை தேர்வு செய்யவில்லை என்று குற்றம் சொல்லாம்.ஆனால், எல்லா திரைப்படமும் தோல்வி என்றார் யாரை குற்றம் சொல்வது. விடாமுயற்சி படத்திலேயே லைகா நிறுவனத்திற்கு 150 கோடி கஷ்டம் ஏற்பட்டுள்ளது இதுதான் உண்மை. விடாமுயற்சி 150 கோடியை தாண்டுவதே கஷ்டம் தான். லைகா பெரிய நடிகர்களை வைத்து எடுத்த படமும் கை கொடுக்கவில்லை. சின்ன படமும் கைகொடுக்காத போது, லைகா நிறுவனம் எப்படி தொடர்ந்து படத்தை தயாரிக்கும்.
விஜய்யின் மகன் படம் என்னாகும்: ஒரு கோடி ரெண்டு கோடி என்றால் சமாளித்து விடலாம். தொடர்ந்து பல கோடி கஷ்டம் வரும் போது சமாளிப்பது கஷ்டம். தற்போது லைகா நிறுவனம் விஜய்யின் மகன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அந்த படத்தை எடுத்துக்குமா இல்லையா என்பது லைகா நிறுவனத்திற்கே தெரியாது என்று பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











