'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!
பொறுக்கின்னு ஒரு வசனம் பேசச் சொன்னோம். இமேஜ் பாதிக்கும் என்று கூறி பேச மறுத்து விட்டார் ஹீரோயின் கிருத்திகா. அவரும், ஹீரோ அசோக்கும் சேர்ந்து எங்களை ரொம்ப சிரமப்படுத்தி விட்டனர். இவர்களை நடிக்க வைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன் என்பவர் கூறியுள்ளார்.
அசோக் -கிருத்திகா ஜோடியாக நடித்த படம்தான் வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்.
அசோக்குக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த படம் இது. கிருத்திகா புதுமுகம் ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவர் மீதும் புகார்களை அடுக்கியுள்ளார் தயாரிப்பாளர் ராமச்சந்திரன்.

நிறையக் கஷ்டம்
இருவரும் படப்பிடிப்பின்போது நிறையக் கஷ்டம் கொடுத்து விட்டதாக கூறுகிறார் ராமச்சந்திரன்.

மார்க்கெட் இல்லாத அசோக்
அசோக் குறித்து அவர் கூறுகையில், மார்க்கெட்டே இல்லாத அசோக்குக்கு நான் இந்தப் படம் மூலம் வாய்ப்பளித்தேன். ஆனால் அவரோ பெரும் சிரமத்தைக் கொடுத்து விட்டார்.

பொறுக்கின்னா என்ன தப்பு
படத்தில் பொறுக்கி என்று ஒரு வசனம் வருகிறது. அதைச் சொல்ல முடியாதுஎன்று கூறி விட்டார் புதுமுகமான கிருத்திகா. பெரிய நடிகர்களே இமேஜ் பார்ப்பதில்லை. இவருக்கு எதற்கு இமேஜ் என்று கேட்கிறார் ராமச்சந்திரன்.

புரோமாவுக்கு வரவில்லை
அதேபோல படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் அவர் வர மறுத்து விட்டார். மலேசியாவுக்குப் படப்பிடிப்புக்குப் போனபோது ஒரு நாள் முழுவதும் எங்கேயோ போய் விட்டார். பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்று புலம்புகிறார் ராமச்சந்திரன்.
உண்மை என்னவோ...??


Click it and Unblock the Notifications











