ஸ்ரீதேவி நினைவு தினம்.. கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போனிகபூர்!

மும்பை : இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் நடித்துவந்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு துபாயில் திருமணம் ஒன்றில் கலந்துக் கொண்ட அவர் தனது அறையில் உயிரிழந்தார்.

 நடிகை ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்தவர். தமிழில் அறிமுகமானாலும், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசகிர்களை கவர்ந்த ஸ்ரீதேவி, ரஜினியுடன் மட்டுமே 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவை அனைத்தும் சூப்பர்ஹிட்டானது.

முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதேவி

முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதேவி

கமல், சிவாஜி என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதேவி, ஒரு கட்டத்தில் இந்திப் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அங்கும் அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதேவி, ஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி

ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி

திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அந்தப் படத்தில் கேமியோ ரோலில் அஜித் நடித்திருந்தார். அந்தப் பழக்கமே தற்போது போனிகபூர் தயாரிப்பில் 3 படங்களில் அஜித் நடிக்க காரணமாக அமைந்தது.

2018ம் ஆண்டில் மறைவு

2018ம் ஆண்டில் மறைவு

கடந்த 2018ம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஸ்ரீதேவி சென்ற நிலையில், தன்னுடைய அறையில் அவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த துக்கத்திலிருந்து தற்போதுவரை தன்னால் மீள முடியவில்லை என்று தொடர்ந்து அவரது மூத்த மகளான ஜான்வி கபூர் கூறிவருகிறார்.

போனிகபூர் -ஜான்விகபூர் உருக்கம்

போனிகபூர் -ஜான்விகபூர் உருக்கம்

இதனிடையே ஸ்ரீதேவி இறந்து 5 ஆண்டுகளை கடந்த நிலையில் அவரது கணவர் போனிகபூர் மற்றும் ஜான்வி உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அவர் குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தான் இப்போதும் தன்னுடைய அம்மாவை தேடி வருவதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி -போனிகபூர் புகைப்படம்

ஸ்ரீதேவி -போனிகபூர் புகைப்படம்

இதனிடையே, 5 ஆண்டுகளுக்கு முன்பு நீ எங்களைவிட்டு பிரிந்தாய், உன்னுடைய அன்பும் நினைவுகளும் எப்போதும் எங்களை முன்னெடுத்து செல்லும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படம்

ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படம்

இதனிடையே ஸ்ரீதேவி கடைசியாக கலந்துக் கொண்ட திருமணத்தின்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் போனிகபூர் தன்னடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கடைசி புகைப்படம் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அதில் உறவினர்கள் சூழ ஸ்ரீதேவி, போனிகபூர் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X