ஜான்வி கபூர் தமிழ் படங்களில் நடிக்கிறாரா.. போனி கபூர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

மும்பை : நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் ஜான்வி கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஆர்யாவுடன் இணைந்து ஜான்வி கபூர் பையா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகையாக அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். கவர்ச்சி மட்டுமில்லாமல் நடிப்பும் தனக்கு வரும் என்று தன்னுடைய படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.

 அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தமிழில் சூப்பர்ஹிட்டடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஜான்வி கபூர் நடித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கவும் சமீபத்திய பேட்டியில் இவர் தெரிவித்திருந்தார். தெலுங்கிலும் இவர் ஜூனியர் என்டிஆருடன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

பையா 2 படத்தில் ஜான்வி கபூர்?

பையா 2 படத்தில் ஜான்வி கபூர்?

இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா கமிட்டாகியுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக தமிழில் ஜான்வி கபூர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய பாகத்தில் கார்த்தி மற்றும் தமன்னா ஜோடி சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவுடன் ஜோடி?

ஆர்யாவுடன் ஜோடி?

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் தற்போது கார்த்திக்கு பதிலாக ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை லிங்குசாமியே இயக்கவுள்ளதாகவும் அதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தமிழில் பையா 2 படத்தின் மூலம் ஜான்வி கபூர் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக வெளியான தகவல், தமிழ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

போனிகபூர் மறுப்பு

போனிகபூர் மறுப்பு

ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜான்வி கபூரின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது ஜான்வி கபூர் எந்த தமிழ்ப் படத்திலும் கமிட்டாகவில்லை என்றும் இத்தகைய தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

நடிகை ஜான்வி கபூர், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதுடன், தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாகவும் செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்த தன்னுடைய கவர்ச்சிப் படங்களால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்கள், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X