அஜித்தோட ஸ்டார் அந்தஸ்துதான் துணிவு படத்தோட ப்ரமோஷன்.. போனிகபூர் பளிச்!

சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசானது.

விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படம் ஒரே நேரத்தில் மோதியது. இரண்டு படங்களும் வெவ்வேறு ஜானர்களில் வெளியான போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

த்ரில்லர் பாணியில் வெளியான துணிவு படம் 25 நாட்களை கடந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல வசூலையும் பெற்றுத் தந்துள்ளது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது துணிவு படம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ரிலீசானதால் இந்தப் படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

துணிவு படத்தின் வெற்றி

துணிவு படத்தின் வெற்றி

வெவ்வேறு ஜானர்களில் வெளியான இந்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு துணிவு படம் உருவாகியிருந்த நிலையில், படம் தற்போது 25 நாட்களை திரையரங்குகளில் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

3வது முறையாக கூட்டணி

3வது முறையாக கூட்டணி

முன்னதாக ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களில் நடித்திருந்த அஜித், 3வது முறையாக துணிவு படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படம் தற்போது எதிர்பார்த்த வெற்றியை அஜித்திற்கு கொடுத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

அஜித்தின் நட்சத்திர அந்தஸ்து

அஜித்தின் நட்சத்திர அந்தஸ்து

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தை வைத்தே அடுத்தடுத்த படங்களை தயாரித்துள்ளார். இதனிடையே, போனிகபூர் தற்போது அளித்துள்ள பேட்டியில், துணிவு படத்திற்கு அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தே மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். நட்சத்திர அந்தஸ்தே மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்தததாக தெரிவித்துள்ளார்.

படைப்பாளி எப்போதும் சரியாக இருக்க முடியாது

படைப்பாளி எப்போதும் சரியாக இருக்க முடியாது

மேலும் தான் வெற்றி -தோல்வியை ஒரே மாதிரி மாதிரிதான் அணுகுவதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறித்து பேசிய போனிகபூர், ஒரு படைப்பாளி எப்போதும் சரியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். தான் தயாரித்த படங்களே இதற்கு உதாரணம் என்றும் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அஜித்தின் அடுத்தடுத்த படங்களை தயாரித்துள்ள போனிகபூர், அடுத்ததாக தமிழில் மேலும் படங்களை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான படத் தேர்வுகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X