சூர்யா இந்தி படத்தில் நடிப்பது கன்பார்ம்.. ஹிரோயின் யார் தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா ஏற்கனவே ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி, தெலுங்கில் தயாரான ரத்த சரித்திரா படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தற்போது சூர்யா இந்தி படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தி உள்ளார் போனி கபூர்.
தயாரிப்பாளரும் ஜான்வி கபூரின் தந்தையுமான போனி கபூர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அதில், எனது மகள் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் இங்கு படப்பிடிப்பு தளத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளையும் நேசிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து, ராம் சரணுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார். அவர்களின் லுக் டெஸ்ட் சிறப்பாக வந்துள்ளது. ராம் சரணுடன் நடிப்பதை, பணிபுரிவதை ஜான்வி பாக்கியமாக உணர்கிறார். இப்படம் வெற்றி அடைந்தால், ஜான்வி நிறைய தெலுங்கில் படங்களில் நடிப்பார். மேலும், சூர்யாவுடன் ஓர் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர் போனி கபூர்: என் மனைவி ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்துள்ளார். என் மகளும் அதையே செய்வார் என்று நம்புகிறேன். இதற்காகவே, நான் ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்க விரும்பினேன். ஒரு காலத்தில் ஸ்ரீதேவிக்காக ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்க விரும்பினேன் ஆனால், அப்போது அது நடக்கவில்லை. நான் 12 படங்களை ஹைதராபாத்தில் படமாக்கினேன். அப்போது அது வளர்ந்து வரும் நகரமாக இருந்தது. சில வருடங்கள் கழித்து நான் திரும்பி வந்தபோது, மொத்த ஹைதராபாத் நகரமும் மாறியிருக்கிறது என்று போனி கபூர் பேசினார்.
சூர்யாவின் இந்தி படம்: இவர் இவ்வாறு பேட்டி அளித்திருப்பதன் மூலம், சூர்யா இந்தியில் கமிட்டாகி உள்ளது உறுதியாகி உள்ளது. இந்தி இயக்குனர் ஓம்பிரகாஷ் மவுரியா இயக்கத்தில் மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது. இதில், சூர்யாவிற்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனக் கூறியிருந்தார். எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் மகாபாரதத்தை மையப்படுத்திய புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் படத்திற்கு அவர்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
கைவசம் உள்ள படம்: நடிகர் சூர்யா கங்குவா, வாடிவாசல், சுதா கொங்கராவின் புறநானூறு' எனப் படங்களைக் கைவசம் வைத்து இருக்கிறார். மிக பிரமாண்டமாக பொருட்செலவில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











