போனிகபூர், உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு… என்ன மேட்டரா இருக்கும் !

சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ராகுல், மரியாதை நிமித்தமாக உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகிள் 15 தமிழில் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.

இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஆர்ட்டிகிள் 15

ஆர்ட்டிகிள் 15

2019ம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனா திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. கிராம புறங்களில் நடக்கும் ஜாதிய வன்கொடுமைகளை பற்றி பேசும் இப்படத்தினை அனுபவ் சின்ஹா இயக்கி இருந்தார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆயுஷ்மான் குரானா இப்படத்தில் நடித்திருந்தார். சிறந்த கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என அனைத்திலும் இப்படம் விருது பெற்றது.

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

இப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தினைத தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஆரி தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜேசேகர், யாமினி சுந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், அப்துல் லீ ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

வலிமை

வலிமை

இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் ஆகியோர் இன்று உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளனர். போனி கபூர், தல அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் 'தல 61' படங்களை தயாரித்து வருகிறார்.

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

அந்த திடீர் சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எனது 'நெஞ்சுக்கு நீதி' திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ராகுல் இருவரும் இன்று என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X