45 அடி உயரத்துக்கு கட்அவுட்... யாருக்குன்னு பாருங்க... போனிகபூர் வெளியிட்ட வீடியோ!

சென்னை :அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது நெஞ்சுக்கு நீதி படம். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ள நிலையில், படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் தான்யா ரவிச்சந்திரன்.

நெஞ்சுக்கு நீதி படம்

நெஞ்சுக்கு நீதி படம்

நடிகர் உதயநிதி, தான்யா ரவிசந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது நெஞ்சுக்கு நீதி. தன்னுடைய தாத்தா முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பவர்புல்லான டைட்டிலையே தன்னுடைய படத்திற்கு தற்போது பயன்படுத்தியுள்ளார் உதயநிதி.

பாலிவுட் படத்தின் ரீமேக்

பாலிவுட் படத்தின் ரீமேக்

இந்தப் படம் பாலிவுட்டில் வெளியான ஆர்ட்டிகள் 15 என்ற படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழ் ரைட்சை வாங்கியுள்ள தயாரிப்பாளர் போனிகபூர் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். எப்போதுமே சிறப்பான பிரமோஷன்களை இவர் தனது படங்களுக்கு கொடுத்து வருகிறார்.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இதற்கு சிறப்பான உதாரணம் அவரது தயாரிப்பில் வெளியான அஜித்தின் வலிமை படம். அந்தப் படத்திற்கு ரசிகர்களே போதும், கொஞ்சம் திரையிலும் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறும் அளவிற்கு அவர் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

போனிகபூர் தயாரிப்பு

போனிகபூர் தயாரிப்பு

அந்த வகையில் தற்போது உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தை அவர் தயாரித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். அவர் முன்னதாக இயக்கிய கனா படம் தற்போது சீனா வரையில் சென்றுள்ளது. சீனாவில் திரையடப்பட்ட ஒரு சில படங்களில் இந்தப் படமும் ஒன்று.

45 அடிக்கு கட்அவுட்

45 அடிக்கு கட்அவுட்

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், போனிகபூர் தன்னுடைய பிரமோஷன் பணிகளை தற்போது துவங்கியுள்ளார். சத்யம் திரையரங்கில் இந்தப் படத்திற்காக உதயநிதிக்கு 45 அடி உயரத்தில் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார். இந்த கட்அவுட் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.

போலீஸ் கெட்டப்பில் கட்அவுட்

போலீஸ் கெட்டப்பில் கட்அவுட்

இந்நிலையில் படத்தில் அவருக்காக போலீஸ் கெட்டப்பில் மிகவும் பிரம்மாண்டமாக சத்யம் திரையரங்கு வாசலில் இந்த கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்அவுட் அந்த பக்கமாக செல்லும் ரசிகர்களை மிகவும் அதிகமாக கவர்ந்து வருகிறது. படத்தின் ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X