வெற்றியா... தோல்வியா... வலிமை பத்தி போனிகபூர் வெளியிட்ட உற்சாக பதிவு!
சென்னை : நடிகர் அஜித் லீட் ரோலில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது வலிமை.
திரையிடப்பட்ட அரங்குகளில் எல்லாம் சிறப்பான ரசிகர்கள் பட்டாளத்துடன் பட்டையை கிளப்பி வருகிறது படம்.
இந்நிலையில் வலிமை படம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர்.

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வலிமை படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது வலிமை. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் வசூல் சாதனை புரிந்துள்ளது.

வசூல்மழை பொழியும் வலிமை
கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல்மழையை பொழிந்து வருகிறது படம். 3 நாட்களில் 100 கோடி கிளப்பில் இந்தப் படம் இணைந்துள்ளது. அஜித் படங்களின் மற்றும் சமீபத்திய முன்னணி நடிகர்களின் படங்களின் முந்தைய சாதனைகளை இந்தப் படம் பீட் செய்துள்ளது.

அதிகமான ஆக்ஷன் காட்சிகள்
வார இறுதியிலும் வசூல் மழையை படம் பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப படத்தின் புக்கிங் நிறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனிலும் அதிரடியை கிளப்பியுள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் சில ரசிகர்களை மிகவும் குஷியாக்கியுள்ளது.

திரைக்கதைக்கு முக்கியத்துவம் இல்லை
ஆயினும் திரைக்கதையை இன்னும் செதுக்கி சிறப்பாக கொடுத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. எச் வினோத் தனது முந்தைய படமாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தோடு ஒப்பிடும்போது இதில் அந்த அளவிற்கு திரைக்கதையை கொடுக்கவில்லை என்பதே பலரின் விமர்சனமாக உள்ளது.

மிகப்பெரிய ஹிட்
இந்நிலையில் இந்தப் படம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில் படம் மிகப்பெரிய ஹிட் என்றும் மக்களின் மனதில் வலிமை படம் ஆண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் அருகிலுள்ள திரையரங்கில் படத்தின் டிக்கெட்டை புக் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











