அம்மாவுடன் சென்றதால் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்த தயாரிப்பாளர்.. பிரபல நடிகை பரபர புகார்
அம்மாவுடன் சென்றதால் தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என நடிகை பூனம் கவுர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: அம்மாவுடன் சென்றதால் தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என நடிகை பூனம் கவுர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
ஹாலிவுட் நடிகைகள்தான் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியிலான தொல்லைகளை பகிர்ந்து வந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, வாய்ப்பு தருவதாக கூறி தன்னை தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்திக்கொண்டதாக கூறி குண்டை தூக்கி போட்டார்.

தமிழ் லீக்ஸ்
ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அதற்கான ஆதாரங்களை வெளியிட்ட அவர், தமிழ் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்லீக்ஸ் என இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டினார்.

பூனம் கவுர் பரபர புகார்
இந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் நடிகை பூனம் கவுர் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகாரை கூறியுள்ளார். நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் பிரபலமான நடிகை பூனம் கவுர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வாய்திறந்துள்ளார்.

தனியாக அழைத்தார்
அவர் கூறியதாவது, ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னார். அலுலகத்தில் வந்து சந்திக்குமாறு அழைத்தார்.

அம்மாவுடன் சென்றேன்
நானும் என்னுடைய அம்மாவுடன் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அவர் நான் எனது அம்மாவுடன் வருவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.

வாய்ப்பு தரவில்லை
அதனால் என்னுடன் சரியாக கூட அந்த தயாரிப்பாளர் பேசவில்லை. இதுவரை அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை" இவ்வாறு கூறியுள்ள பூனம் கவுர் அந்த தயாரிப்பாளரின் பெயரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











