Samantha : அந்தஸ்தை இழந்த சமந்தா.. பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை கருத்து.. சமந்தா பதிலடி!

சென்னை : நடிகை சமந்தா சர்வதேச அளவில் மிகவும் கவனத்திற்குரிய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளார்.

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவந்த இவருக்கு தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்ததாக அதே இயக்குநர்களுடன் புதிய வெப் தொடரில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சாகுந்தலம் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. சொதப்பலாகவே அமைந்தது.

Producer Chitti babu comments on Samanthas cinema career After Pushpa

தயாரிப்பாளர் கருத்திற்கு சமந்தா பதிலடி : நடிகை சமந்தா சர்வதேச அளவில் அதிகமான ரசிர்களை கொண்டவராகவும் அதிகமான ஸ்டார் வேல்யூ கொண்டவராகவும் காணப்படுகிறார். தன்னுடைய விவாகரத்து உள்ளிட்ட தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எந்தவகையிலும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் அவர் கவனமுடன் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது சாகுலந்தலம் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. உடல்நிலை சரியில்லாத போதிலும், இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா ஓடி ஓடி வேலை செய்தார்.

தற்போது சிட்டாடல் படத்தின் பிரீமியர் ஷோவிலும் சமந்தா பங்கேற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். வருண் தவானுடன் இணைந்து இந்த ஷோவில் சமந்தா பங்கேற்ற நிலையில், இவர்கள் அணிந்திருந்த உடை, அனைவரையும் கவர்ந்து பேசுபொருளாகியுள்ளது. கருப்பு நிற அவுட்பிட்டில் சமந்தா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அந்த உடையின் மதிப்பு 68,000 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வருண் தவான் மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரியும் அதிகளவில் வொர்க் அவுட் ஆகி படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுத்துள்ளது.

Producer Chitti babu comments on Samanthas cinema career After Pushpa

முன்னதாக யசோதா படத்தின் பிரமோஷனின் போது கண்ணீர் விட்டு பேசினார் சமந்தா. அந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. அதே யுக்தியை தற்போது சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்கும் சமந்தா பயன்படுத்திய நிலையில், இத்தகைய சென்டிமெண்ட்கள் மட்டுமே ஒரு படம் ஓடுவதற்கு போதுமானது கிடையாது என்று பிரபல தயாரிப்பாளர் சிட்டி பாபு பேசியுள்ளார். சமந்தா தன்னுடைய நாயகிக்கான அந்தஸ்தை இழந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய விவாகரத்துக்கு பின்பு புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் சமந்தா. இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்தாலும் நாயகிக்கான இடத்தை சமந்தா இழந்து விட்டதாகவும் மீண்டும் அவருக்கு அந்த இடம் கிடைக்காது என்றும் சிட்டிபாபு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவருடைய சினிமா கேரியர் அவ்வளவுதான் என்றும் சிட்டிபாபு கூறியுள்ளார். தனக்கு கிடைக்கும் மற்ற வாய்ப்புகளை சமந்தா பயன்படுத்துவதுதான் அவருக்கு சிறப்பானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Producer Chitti babu comments on Samanthas cinema career After Pushpa

இதனிடையே சிட்டிபாபுவின் இந்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகவத் கீதையின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார். நம்முடைய செயல்கள் அனைத்திற்கும் செய்வதற்கான உரிமை நமக்கு உள்ளது என்றும் ஆனால் நமது செயல்பாடுகள் அனைத்துமே நல்ல ரிசல்டையே கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். நம்முடைய செயல்பாடுகளுக்கு கிடைக்கும் வெற்றி தோல்விகள் நம்மை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்றும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X