சிக்கலில் AR முருகதாஸ்.. எஸ்கேப்பான SK.. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி இப்படி மாட்டிக்கிட்டாரே
சென்னை: கடந்த ஆண்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படங்களான சிக்கந்தர் ( சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம்) அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி என இரண்டு படங்களும் படுதோல்வி படமாக மாறியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதாராஸி படம் மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக மாறியதால், படத்தின் தயாரிப்பாளர் என்.வி. பிரசாத் இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல இடங்களில் ஏ.ஆர். முருகதாஸ் மீது புகார் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, ருக்மணி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் மதராஸி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தின் திரைக்கதை மிகவும் மோசமாக என்பதைக் காட்டிலும் லாஜிக்கே இல்லாமல் இருந்ததால், நெட்டிசன்கள் படத்தை தாளித்து எடுத்துவிட்டார்கள். ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற திரைக்கதையில் பலரையும் வியக்கவைத்த ஏ.ஆர். முருகதாஸ் படமா இது என்று எல்லாம் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
ஒரு சில நெட்டிசன்கள் எல்லாம் உண்மையிலேயே இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்கினாரா அல்லது வேறு யாராவதுமா என்று கூட கேள்வி கேட்டனர். இந்த படத்தை மொத்தம் ரூபாய் 115 கோடிகளில் எடுத்து முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தை முடிக்கும் போது ரூபாய் 170 கோடிகளுக்கு முடிந்துள்ளது. இது தயாரிப்பாளருக்கு அப்செட்டைக் கொடுத்தாலும், படம் வசூலை அள்ளி இருந்தால் தற்போது பிரச்னையே வந்திருக்காது.

அதிரடி புகார்: ஆனால் தயாரிப்பாளர் என்.வி. பிரசாத்தோ, இந்த படத்தால் சுமார் ரூபாய் 40 கோடிகள் வரை எனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு காரணம், முருகதாஸ் முழு கவனமாக இந்த படத்தை இயக்காமல் இடையில் சல்மான் கானின் சிகந்தர் படத்தை இயக்க சென்றுவிட்டார். அதனால் தான் இவ்வளவு நஷ்டம். எனவே முருகதாஸ் இடத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூபாய் 10 கோடிகளையாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று முறையிட்டுள்ளார்.
தீர்வு என்ன?: புகாரை விசாரித்த இயக்குநர் சங்கம், ஏ. ஆர். முருகதாஸை ஒரு நல்ல கதையை எழுதி என்.வி. பிரசாத்திடம் கொடுக்கச் சொல்லி உள்ளனர். அதற்கு ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமரன் படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி மற்றும் பராசக்தி என இரண்டுமே வணிக ரீதியாக பெரிய வெற்றியை எட்டாதது பேசு பொருளாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











