ஆர்.ஆர்.ஆர் படம் அந்த தேதியில் ரிலீஸ் ஆகாது.. தயாரிப்பாளர் உறுதி.. பிறகு எப்போ ரிலீஸ்?

By

சென்னை: ராஜமவுலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாது என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Amazon Prime ல் வெளியாகும் 7 படங்கள் | PonMagal Vandhal, Penguin

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆலியா பட்

ஆலியா பட்

பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் குரலில் அட்டகாசமாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ராம்சரணின் அறிமுகக் காட்சி சமீபத்தில் வெளியானது. அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இந்தி பதிப்பு காட்சியை வெளியிட, தெலுங்கு வெர்ஷனை ராம்சரண் மற்றும் ராஜமவுலி வெளியிட்டனர்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

தமிழ்ப் பதிப்பை ஜூனியர் என்.டி.ஆர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மோஷன் போஸ்டரையும் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஜனவரி ரிலீஸ்

ஜனவரி ரிலீஸ்

லாக்டவுன் காரணமாக படத்தில் வேலைகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை ஜனவரி 8 ஆம் தேதி, சங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், இப்போதுள்ளச் சூழலில் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தெரிவித்துள்ளார்.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

இதுபற்றி அவர் கூறும்போது, 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. அரசு, குறைவான ஆட்களை வைத்து ஷூட்டிங்கை தொடங்க அனுமதித்தால் அதற்கு தயாராக இருக்கிறோம். கிராபிக்ஸ் வேலைகளுக்கும் அதிக நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் ஜனவரி ரிலீஸ் சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X