twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தயாரிப்பாளர் சங்கம் கூட்டம்...விஷாலின் முடிவு தான் என்ன? - வீடியோ

    சென்னை : கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ் திரையுலகினரின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளது. அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

    படங்கள் ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்து பேசி நாளை தெரிவிப்போம் என நேற்று விஷால் கூறியிருந்தார். அதன்படி, இன்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    Producer council decided to release Only three films per week

    இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது எனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் எந்த சமரசத்திற்கும், பாகுபாட்டிற்கும் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரையுலகினரின் வேலை நிறுத்தத்தால் ஏற்கெனவே வெளியாக இருந்த படங்களும் இதே வழிமுறைப்படி வாராவாரம் மூன்று படங்களாக ரிலீஸ் செய்யப்படும் எனக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

    இனி படங்களின் ரிலீஸ், சென்சார் சான்றிதழ் பெற்ற வரிசைப்படியே நிகழும் என ஏற்கெனவே புதிய முறையை முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்களின் போட்டியைத் தவிர்க்க சிறிய படங்கள் மொத்தமாக ரிலீஸ் ஆவது எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த புதிய முறைகளைக் கையாளவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

    இந்த முறைப்படி சென்சார் சான்றிதழ் பெற்ற தேதி அடிப்படையில் மூன்று மூன்று படங்களாக ரிலீஸ் ஆனால், 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பது குறித்தும் குழப்பம் நிலவி வருகிறது.

    English summary
    Tamil Cinema Strike has come to an end. Producer council has been decided that only three films per week will be released.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X