twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புயல் நிவாரண நிதியாக 25 லட்சம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

    By Shankar
    |

    S A Chandrasekaran and Jayalalitha
    சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக முதல்வரிடம் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ் பெயர்களை கொண்ட 'யு சான்றிதழ்' பெற்ற படங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளுடன் வரிவிலக்கு அளித்துள்ளார்.

    இதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய நடைமுறையில், 5 அல்லது 6 சதவீத படங்களை தவிர, மீதி படங்கள் அத்தனையும் தோல்வி அடைகின்றன.

    தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே திரைப்பட தொழிலாளர்களுடன் ஊதிய பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருக்கிறோம்.

    ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

    இதற்காக பட அதிபர்கள் கேயார், ஹென்றி உள்பட 15 பேர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். பேச்சுவார்த்தை முடியும் வரை, எந்த தயாரிப்பாளரும் தற்போதைய சம்பளத்தை தவிர, கூடுதலாக சம்பளம் கொடுக்கக் கூடாது. மீறி, கூடுதல் சம்பளம் கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பேச்சுவார்த்தை முடியும் வரை, தொழிலாளர்கள் பழைய சம்பளத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    செலவைக் குறைங்க...

    பட தயாரிப்பு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    100 நாட்கள், 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    ரூ 25 லட்சம் நிதி உதவி

    சமீபத்தில் வீசிய தானே புயலால் கடலூர் சுற்று வட்டாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்க இருக்கிறோம்", என்றார்.

    English summary
    The Tamil Film Producer Council has announced Rs 25 lakh relief fund to Thane cyclone victims. 'The amount will be handed over to CM Jayalalitha soon', SA Chandrasekaran, the president of the council told.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X