twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா'... விஷால் கேள்வி!

    தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளை முடிந்த வரை சுமூகமாக முடிக்கவே தான் விரும்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா- விஷால்- வீடியோ

    Producer council is not a police station, says Vishal
    சென்னை: தயாரிப்பாளர் சங்கம் என்பது போலீஸ் ஸ்டேஷன் அல்ல என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

    யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார் நடிகர் விஷால். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட விஷால், பட வெளியீடு காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவு உள்ளிட்டவைகள் குறித்து பேட்டி அளித்தார்.

    அவர் அளித்த பேட்டி விவரம்:-

    கேள்வி - சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருப்பது பற்றி?

    பதில் - இது எதிர்பார்த்தது தான். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும். வரும் தேர்தலில் தென் இந்திய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும். எப்போதுமே மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் தென் மாநிலங்களை புறக்கணிக்கிறார்கள். இனி அது நடக்காது. ஜெயலலிதா அவர்கள் இல்லாதது மட்டும்தான் குறை. தமிழ்நாட்டின் 39 எம்.பி. இடங்கள் அகில இந்திய அளவில் ஆட்சி அமைக்க முக்கியத்துவம் வகிக்கும்.

     இது என்னய்யா சோதனை: விஜய்க்கு வந்த அதே பிரச்சனை விஜய் சேதுபதிக்கும் இது என்னய்யா சோதனை: விஜய்க்கு வந்த அதே பிரச்சனை விஜய் சேதுபதிக்கும்

    கேள்வி - பாஜக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

    பதில் - ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் சரியாக படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். பாஜக மக்கள் செல்வாக்கையையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டது என்பதைத் தான் காட்டுகிறது. மக்கள் தங்கள் மனதில் உள்ளதை காட்டி இருக்கிறார்கள்.

    கேள்வி - தயாரிப்பாளர் சங்கத்தில் உங்களை வேலை பார்க்கவே விடவில்லை என்று விஷ்ணு விஷால் கூறி இருக்கிறாரே?

    பதில் - அப்படி இல்லை. தயாரிப்பாளர் சங்கம் என்பது போலீஸ் ஸ்டேஷன் அல்ல. நாங்கள் வழிகாட்ட தான் முடியும். எங்களால் முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்த பார்க்கிறோம். சங்கம் சார்பாக ஒரு விஷயத்தை கொண்டு வரும்போது விஷாலின் தனிப்பட்ட முடிவாக பார்க்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. வெளியீட்டுக்கு ஒழுங்கு கமிட்டி கொண்டுவந்ததால் தான் இந்த ஆண்டு அதிகமான படங்கள் வெற்றி அடைந்தன. எல்லோரும் சம்பாதித்தார்கள். 21 ஆம் தேதி வரவேண்டும் என்று எல்லோருமே விரும்புகிறார்கள். ஆனால் தியேட்டர்கள் அந்த அளவுக்கு இல்லையே... தேவைக்கு அதிகமான உற்பத்தி நடக்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

    கேள்வி - இதற்கு தீர்வு என்ன?

    பதில் - நான் விடமாட்டேன். ஜனவரிக்கு பிறகு மீண்டும் ஒழுங்கு கமிட்டி வரும். இன்னும் கட்டுப்பாட்டுடன் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும். சினிமாக்காரர்கள் பட வெளியீட்டுக்கு பின்னும் கூட ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக தான் விட்டுக்கொடுத்து போக சொல்கிறேன். இந்த வாரமும் போன வாரமும் தியேட்டர்கள் காலியாக இருந்தன. எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. இந்த வாரங்களில் ஏதாவது படங்கள் வெளியாகி இருந்தால் நெருக்கடி இருந்து இருக்காது.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

    English summary
    Actor Vishal says that he tries to solve the issues in producer council smoothly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X