twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்க விவகாரம்.... பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விஷால் நோட்டீஸ்!

    தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    |

    சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நடிகர் விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பதவி விலகக் கோரி, ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் போர்க் கொடி உயர்த்தினர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து தி.நகர் மற்றும் அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டனர்.

    Producer council issues notice to rival producers

    மேலும் பாரதிராஜா தலைமையில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து விஷாலுக்கு எதிராக மனு அளித்தனர். இதையடுத்து களத்தில் இறங்கிய விஷால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றார். அவரை தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அ வர் விடுவிக்கப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்து போலீசார் சீல் வைத்தனர்.

    இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஷாலுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

    இந்நிலையில் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, அழகப்பன், எஸ்.வி.சேகர், டி.சிவா, ரித்திஷ் உள்ளிட்ட 15 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The tamil film producers council have issued notice to rival producers who locked the office two days ago.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X