'பயபுள்ள' இவ்ளோ கேட்டா என்ன பண்றது.. எப்படி ரிலீஸ் பண்றது?
சின்னப் படங்கள் வெளியாக உதவி செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் மேடைதோறும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதற்கு மாறாக அந்த சங்கத்தின் ஒரு உறுப்பினர் நடப்பதாக வெளிப்படையாக புகார் கூற ஆரம்பித்துள்ளனர் ஒரு படத்தின் தயாரிப்பாளர்கள்.
ரஜினி ரசிகர் மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பால நமச்சிவாயமும், அவரின் மைத்துனர் மணிமாறனும் இணைந்து புதுமுகங்களை வைத்து தயாரித்துள்ள படம் பயபுள்ள.

இந்தப் படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிட முடியவில்லையாம்.
வெளியிட முடியாமல் தவிக்கும் சிறு படங்கள் வெளியாக உதவுவோம் என தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பேச்சை நம்பி, உதவி கேட்டுப் போயிருக்கிறது பயபுள்ள டீம்.
அவர்கள் அணுகியது, சங்கத்தின் ஒரு செயற்குழு உறுப்பினரை. இவரும் தயாரிப்பாளர்தான். பழனியாண்டவர் பெயர் கொண்ட அந்த பார்ட்டி, பயபுள்ளயை பிரச்சினையின்றி வெளியிட ஒரு பத்து எல் வெட்டுங்க என்றாம்.
எந்திரனில் சிட்டியாக வரும் ரஜினி, லஞ்சம் கேட்ட கான்ஸ்டபிளை 'வெட்டுவாரோ' அந்தக் காட்சியை மனதில் நினைத்தபடி திரும்பியதாம் பயபுள்ள குழு.
விஷயத்தை சங்கத் தலைவர் கேயார் காதுக்கு கொண்டு போயிருக்கிறார்களாம்!


Click it and Unblock the Notifications











