twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா விழாக்களும் நடத்தவேண்டாம்.. தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ

    சென்னை : தியேட்டர்களில் படங்களை திரையிடப் பயன்படுத்தப்பட்டு வரும் க்யூப் ஒளிபரப்புக் கட்டணத்தை அந்த நிறுவனங்கள் அதிகரித்துள்ளது.

    அதனைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், புதிதாக சினிமா விழாக்களையும், பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்துவதற்கும் தடை போட்டுள்ளதாம் தயாரிப்பாளர் சங்கம்.

    தயாரிப்பாளர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்கம்

    க்யூப் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி கடந்த மார்சச் 1-ம் தேதி முதல் படங்களை ரிலீஸ் செய்யாமல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள் ஸ்தம்பித்துள்ளன. இந்த தடையால் தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம்

    தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம்

    இந்த நிலையில் நேற்று கூடிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் 8 % கேளிக்கை வரி ரத்து உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றாவிட்டால் வருகிற 16-ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கம் திசைமாறும்

    நோக்கம் திசைமாறும்

    ஸ்ட்ரைக் நேரத்தில் பட விழாக்கள் நடத்துவது ஸ்ட்ரைக்கின் நோக்கத்தை மழுங்கடிப்பது போல் இருப்பதால் அதற்கு தடை விதிக்கலாமா என ஆலோசித்து வருகிறார்களாம். விழாக்கள் நடத்தினால், படத்தை விரைந்து வெளியிட நிர்ப்பந்தம் உருவாகும் என பேசி வருகிறார்களாம்.

    விழாக்கள் நடத்தக்கூடாது

    விழாக்கள் நடத்தக்கூடாது

    இந்த நிலையில் நேற்று மாலை திரைப்பட பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகளை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், இனி திரைப்படம் சம்பந்தமான விழாக்களோ, ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளோ, பத்திரிகையாளர்கள் சந்திப்போ நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.

    நிகழ்ச்சி ரத்து

    நிகழ்ச்சி ரத்து

    அதன் காரணமாக இன்று காலை நடைபெறுவதாக இருந்த 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த தடை குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Producer council strike is going on. In this situation, They plans to stop cinema promotions in this strike period.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X