பா.ரஞ்சித்தை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை தெரியுமா?

தயாரிப்பாளர் சிவி.குமார் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார்

Recommended Video

சிவி.குமார் இயக்கும் 2 வது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்- வீடியோ

சென்னை: தயாரிப்பாளர் சிவி.குமார் தயாரித்து இயக்கும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இன்று தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பல இயக்குனர்களை தன்னுடைய திருக்குமரன் எண்டர்ட்டெயின்மெண்ட் மூலம் அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

Producer CV.Kumar next movie!

அவர் இப்போது கேங் ஆப் மெட்ராஸ் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அசோக்குமார், ப்ரியங்கா ரூத், வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் ஆகியோர் நடிக்கின்றனர்.

கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் கிரிஷ் படத்தொகுப்பு செய்கிறார், ஹரி டவுசியா இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் பெருமையுடன் வழங்கும்... என்று நிறைய படங்களில் பார்த்திருப்போம். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி. முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, கககபோ, இறைவி என பல நல்ல திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

தயாரிப்பாளர் சிவி.குமார் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். சந்தீப் கிஷான், லாவன்யா திருப்பாதி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்து வெளியான மாயவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்போது இரண்டாவதாக கேங் ஆஃப் மெட்ராஸ் எனும் படத்தை தயாரித்து இயக்குகிறார்.

தன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தையே அறிமுக இயக்குனரான பா.ரஞ்சித்தை வைத்து தயாரித்தவர் சிவி.குமார். அறிமுக இயக்குனராக பா.ரஞ்சித் மீது அவர் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X