சர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்!

சர்கார் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சிவி குமார் வேதனையடைந்துள்ளார்

Recommended Video

சர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த சிவி குமார்!- வீடியோ

சென்னை: தனக்கான தலைவனை திரையில் மட்டுமே தேடும் சமூகம் கட்டமைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சிவி.குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

பீசா, தெகிடி, அட்டகத்தி, காதலும் கடந்துபோகும் என் பல படங்களை தயாரித்து புதுய இயக்குனர்களை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நல்ல தயாரிப்பாளர் சிவி.குமார். தற்போது காதலும் கவுந்துபோகும் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

Producer CV Kumar worried about Vijay fans!

சர்கார் பட பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், தனக்கான தலைவனை திரையில் தேடும் சமூகத்தை அனைவரும் உருவாக்குகிறார்கள் என்று வேதனையடைந்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்கத் தெரியாத ஒரு சமூகம் தன் பிரச்சனைகளுக்கான தீர்வை, தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை இங்கு தொடர்ந்து கட்டமைத்து கொண்டிருக்கிறார்கள் அனைவரும்..." என பதிவிட்டுள்ளார்.

அரசின் இலவச திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலவச பொருட்களை முருகதாஸ் உள்ளிட்டோர் தீயிலிடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்ததால்தான் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் மறுதணிக்கை செய்யப்பட்டது.

இதனையடுத்து சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் அரசினால் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், சைக்கிள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எரிப்பது போல மியூசிக்கலி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட இலவசப் பொருட்களை சேதப்படுத்துவதால் யாருக்கு என்ன லாபம்? இனிமேல் இலவசங்களை வாங்கக்கூடாது என்பதை சொல்வதற்குத் தானே படத்தில் காட்சிகள் அமைக்கபட்டது. அதுகூட விஜய் ரசிகர்களுக்கு புரியவில்லையே என சமூக வலைதளங்களில் பலர் ஆதங்கப் படுவதையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X