படம் ரிலீசாகும்போதுதானா 'இந்தக் கணக்கை'ப் பார்ப்பீங்க புரொட்யூசர்?

By Shankar

Recommended Video

நாச்சியார் வசூல் விபரம்..!!

'பச்சை என்கிற காத்து' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீரா. இயக்குநர் தங்கர் பச்சானின் உதவியாளர். அதனைத் தொடர்ந்து நீண்ட போராட்டங்களுக்கு அப்புறம் இயக்கியுள்ள படம் 'மெர்லின்'. விஷ்ணுப்ரியன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்திருக்கிறார்.

சினிமா கனவுகளோடு கோடம்பாக்கத்தில் அலைந்து திரியும் பலரின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான பேய் கதை. வழக்கமான பேய் கதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட கதை. இப்போது இந்தக் கதையை சொல்லவேண்டிய அவசியம் என்ன? நல்ல கேள்வி!

Producer denies to spend for Merlin publicity

இந்தப் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதற்கான பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் இயக்குநர் கீரா. புதிதாகப் படம் எடுக்கவந்த தயாரிப்பாளர் சதீஷ், கூடுதல் விலை சொன்ன காரணத்தினாலேயே எப்போதோ வெளிவர வேண்டிய படம், வெகு தாமதமாக ரிலீஸ் ஆகிறது. யெஸ், வரும் வெள்ளிக்கிழைமை திரைக்கு வருகிறது. தொடர்ந்து படத்தைப் புரமோட் பண்ணுவதிலும் சுணக்கம் காட்டுகிறாராம்.

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு விளம்பரம் ரொம்ப அவசியம் என இயக்குநர் எடுத்துச் சொன்னாலும் 'என் படம், என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்' என்று முகத்திலறைத்தது போல் பதில் சொல்கிறார் தயாரிப்பாளர். புலம்புகிறார் இயக்குநர் கீரா. ஒரு படைப்பாளியாக அவரது வருத்தம் நியாயமானதுதான்.

சின்னப் படமோ பெரிய படமோ, ரசிகர்களுக்கு முறையாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் கடமை இல்லையா? பணம் போட்டுப் படம் தயாரிக்கும் பல தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி இடங்களில் கணக்குப் பார்த்தால் படம் எப்படி தேறும்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X