Ajith: போட்றா வெடிய.. தீபாவளிக்கு ரிலீசாகும் அஜித்தின் விடாமுயற்சி.. உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டு முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார்.
அசர்பைஜானில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஜூலை மாதம் இறுதி வரை திட்டமிடப்பட்டுள்ளது அஜித் மற்றும் ஆரவ் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அர்ஜுன் மற்றும் திரிஷா இருவரும் இந்த படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புகுட்பேட் அக்லி படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் இதன் முதல் கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அசர்பைஜானில் துவங்கியுள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார். கடந்த 24ம் தேதி முதல் இந்த படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வருகிறது. முன்னதாகவே இந்த படத்தின் சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்ற அஜித் பைக் ஓட்டும் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.
அசர்பைஜான் சூட்டிங்: இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை குஷியாக்கி வருகின்றன. தற்போது விடாமுயற்சி சூட்டிங்கில் அஜித் மற்றும் ஆரவ் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். அடுத்த மாதம் இறுதி வரை இந்த படத்தின் சூட்டிங்கில் அஜித் பங்கேற்க உள்ளதாகவும் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் குட்பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கில் அடுத்த வாரத்தில் அர்ஜுன் மற்றும் திரிஷா இருவரும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்தில் சூட்டிங் நிறைவு: படத்தின் சூட்டிங் அசர்பைஜானிலேயே நடத்தப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹைதராபாத்தில் சில பேட்ச் வேலைகளையும் மகிழ்திருமேனி 10 நாட்களுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாதி எடிட்டிங் உள்ளிட்ட அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் டப்பிங் வேலைகள் மட்டுமே நடக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக மீதமுள்ள காட்சிகளுக்கான சூட்டிங் தற்போது நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தீபாவளி ரிலீஸ்: இந்நிலையில் தீபாவளி ரிலீசுக்கான அனைத்து வேலைகளையும் அஜித் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து செயல்படுத்தி வருவதாக தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இந்த படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக விடாமுயற்சி படம் கண்டிப்பாக வெளியாகும் என்றும் தனஞ்செயன் உறுதிப்படுத்தியுள்ளார்


Click it and Unblock the Notifications











