Leo: வெளிநாட்டில் லியோ ஆடியோ வெளியீடா.. நோ சான்ஸ்.. பிரபல தயாரிப்பாளர் பளீச்!

சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் லியோ.

இந்தப் படத்தின் டைட்டில் டீசர், போஸ்டர்கள், வீடியோக்கள், பர்ஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீடு செப்டம்பர் இறுதியில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Producer Dhananjayan confirms that Leo audio launch will be happening in Madurai or Trichy

விஜய்யின் லியோ இசை வெளியீடு வெளிநாட்டில் நடக்காது என தனஞ்செயன் திட்டவட்டம்: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக இணைந்துள்ளனர். படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள நிலையில், இருவேறு கெட்டப்புகளில் லியோ மற்றும் பார்த்திபன் என நடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது காஷ்மீரில் பேட்ச் வொர்க் நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷனை நிறைவு செய்துவிட்டார் விஜய். தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ள அவர், லியோ படத்தின் இசை வெளியீட்டை ஒட்டியே சென்னை திரும்புவார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டானது.

Producer Dhananjayan confirms that Leo audio launch will be happening in Madurai or Trichy

தொடர்ந்து விஜய்யின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி அவரது மிரட்டலான ப்ரமோ வெளியானது. அவரது கேரக்டர் பெயர் ஆண்டனி தாஸ் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி அவர் சம்பந்தமான ப்ரமோ வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம், கைதி படங்களின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படங்கள் எல்சியூவில் இடம்பெற்ற நிலையில், இந்தப் படங்களின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். இந்நிலையில் விஜய்யின் லியோ படமும் இரு பாகங்களாக வெளியாகவுள்ளதாகவும் இந்தப் படமும் எல்சியூவில் இணையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு செப்டம்பர் 3வது வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த இசை வெளியீடு, பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் அதனால் சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டன.

Producer Dhananjayan confirms that Leo audio launch will be happening in Madurai or Trichy

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்தத் தகவலை மறுத்துள்ளார். நடிகர் விஜய், அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் செயல்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் அவரது படத்தின் இசை வெளியீட்டை வைப்பதால் அவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால், வெளிநாட்டில் லியோ படத்தின் இசை வெளியீடு கண்டிப்பாக நடக்காது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒவ்வொரு மீட்டிங்கையும் அவர் அரசியலை நோக்கியே திட்டமிட்டு வருவதாகவும் தனஞ்செயல் கூறியுள்ளார்.

இசை வெளியீட்டிற்காக விஜய் அதிகமாக மெனக்கெடுவார். அதற்காக தன்னுடைய ஸ்பீச்சையும் அவர் சிறப்பாக தயார் செய்யும் நிலையில், இவை அனைத்தையும் தன்னுடைய அரசியல் தளத்திற்கான உபயோகமாக மாற்றவே விஜய் விரும்புவார் என்றும் மதுரை அல்லது திருச்சியில் ஒரு லட்சம் பேர் முன்னிலையில் விஜய் தன்னுடைய ஸ்பீச்சை கொடுக்கும் நிலையில், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு விஜய் காரணமாக அமைவார் என்றும் தனஞ்செயன் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X